தி ஆர்ட்டிஸ்ட் பேசாப் படத்துக்கு 3 கோல்டன் க்ளோப் விருதுகள்
Page 1 of 1

லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற 69வது கோல்டன் க்ளோப் விருது விழாவில் தி ஆர்ட்டிஸ்ட் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படம் (பேசாப் படம்) மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் பிரான்ஸ் நாட்டு திரைப்படம் சிறந்த நகைச்சுவை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை என நகைச்சுவை மற்றும் இசை வகைப்படுத்தலில் மூன்று விருதுகளையும் தட்டிக்கொண்டுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
உலகம்
இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தி அயர்ன் லேடி திரைப்படத்தில் மார்கிரட் தாட்சர் பாத்திரத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப் திரைநாடக வகைப்படுத்தலில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார்.
மார்கிரட் தாட்சராக மெரில் ஸ்ட்ரீப்
மார்கிரட் தாட்சராக மெரில் ஸ்ட்ரீப்
மார்கிரட் தாட்சர் வேடத்தில் நடித்து கிடைத்த கோல்டன் க்ளோப் விருதுக்காக நன்றி கூறிய மெரில் ஸ்ட்ரீப், இங்கிலாந்து வரலாற்றுடன் தன்னையும் சேர்த்துக்கொண்டமைக்காக நன்றி கூறுவதாக விருது மேடையில் தெரிவித்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிககாலம் சினிமாத் துறையில் இருந்து பல விருதுகளை வென்றுள்ளவரான மெரில் ஸ்ட்ரீப் நடித்து 2011 இல் வெளியான தி அயர்ன் லேடி திரைப்படம் அடுத்து நடக்கவுள்ள ஆஸ்கர் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20ம் நூற்றாண்டில் பிரிட்டனில் நீண்டகாலம் பிரதமராக பணியாற்றிய இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த மார்கிரட் தாட்சரின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி தி அயர்ன் லேடி திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, மை வீக் வித் மர்லின் என்ற திரைப்படத்தில் நடித்த மிச்சேல் வில்லியம்ஸ் நகைச்சுவை மற்றும் இசை வகையில் சிறந்த நடிகையாக கோல்டன் க்ளோப் விருது பெற்றார்.
திரை நாடகங்கள் வரிசையில், த டிஸின்டன்ட்ஸ் சிறந்தப் படம் மற்றும் சிறந்த நடிகர் (ஜோர்ஜ் க்ளூனி) ஆகிய இரண்டு விருதுகளைப் வென்றுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோல்டன் ஃபேஷியல்
» மணி ரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்துக்கு பல விருதுகள் குவியும் – வைரமுத்து
» பேசாப் படத்திற்கு ஆஸ்கார் விருது
» பேசாப் படத்திற்கு ஆஸ்கார் விருது
» டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுக்கிறார் மீனா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum