காஷ்மீரில் கலைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் இசைக்குழு
Page 1 of 1

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் மூன்றுபேர் சேர்ந்து அமைத்த இசைக் குழு ஒன்றுக்கு மதபோதகர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த இசைக் குழு கலைக்கப்பட்டுள்ளது.
இசையும் நடனமும் இஸ்லாம் மதத்தில், 'தீயவை-அனுமதிக்கப்படாதவை' என்று கருத்துக் கூறியுள்ள மாநிலத்தின் மூத்த மதபோதகர் ஒருவர், அந்தப் பெண்களின் இசைக் குழுவுக்கு தடை விதித்து மத ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்,
மனித உரிமை
இதையடுத்து அந்த இசைக்குழுவுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. அவர்களுக்கு பல அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
இந்நிலையிலேயே அந்தப் பெண்கள் தமது இசைக்குழுவை கலைக்க முடிவெடுத்துள்ளனர்.
'காஷ்மீரில் இசை மேதைகள்'
'இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று அந்தப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
"பெண்கள் பாடுவதையும் இசைக் கருவிகளை வாசிப்பதையும் மட்டும் தடை செய்வது பெண்கள் மீதான ஒடுக்குமுறையே"
நா. மம்மது
காஷ்மீரிலிருந்து பல இசைக் கலைஞர்கள் உருவாகி, இன்றளவும் இசை வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகின்ற அந்தப் பெண்கள், தம்மீது மட்டும் ஏன் மத ஆணை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நௌஷாத், குலாம் அலி, மெஹ்தி ஹஸன் போன்ற சிறந்த இசை மேதைகள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களது இசைப் பயணம் நிறுத்தப்படவில்லை என்றும் அப்பெண்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இசை ஆய்வாளர் நா. மம்மது பேட்டி
"இசை இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல"
இசை இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல என்று கூறுகிறார், மதுரையிலுள்ள இசையறிஞரும் ஆய்வாளருமான நா. மம்மது அவர்கள்.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இசை இஸ்லாத்துக்கு எதிரனாது என்றும், அது ஆடவர்களின் உணர்வுகளைத் தூண்டுகிறது என்றும் கூறப்பட்டால் முஸ்லிம் ஆடவர்கள் மன உறுதி உள்ளவர்கள் இல்லை என்று நாங்கள் கருதலாமா எனவும் அப்பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமது இசைக்குழுவின் மீது தடை விதிப்பதற்காக மதகுரு தெரிவித்த கருத்து தவறானது என்றும் அப்பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
காஷ்மீரில் தங்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் மூன்று பேர் அடங்கிய அந்த இசைக் குழுவினர் வருத்தப்படுகிறார்கள்.
"இசையும் இஸ்லாமும்"
இதேவேளை, முஸ்லிம்களின் புனித குர்-ஆன் இசைக்கு எதிரானது அல்ல என்று இசையறிஞரும் ஆய்வாளருமான நா மம்மது பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இசையறிஞரும் ஆய்வாளருமான நா. மம்மது
இசை இஸ்லாத்துக்கு எதிரானது என்றால், ஆண்கள் பாடுவதையும் தடை செய்ய வேண்டுமல்லவா எனவும் அவர் வாதிடுகிறார்.
பெண்கள் பாடுவதையும், அவர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதையும் மட்டும் தடை செய்வது என்பது பெண்கள் மீதான ஓர் ஒடுக்குமுறையே எனவும் மம்மது சுட்டிக்காட்டுகிறார்.
அடிப்படை வாதத்தை பேணும் இஸ்லாமியத் தலைவர்களே இசையையும் கலைகளையும் ஒடுக்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இசையை இஸ்லாமியர்களிடமிருந்து எந்த சக்தியாலும் ஒதுக்கிவிட முடியாது எனவும் மம்மது வலியுறுத்திக் கூறுகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கைவைப்பது நியாயமா?
» காஷ்மீரில் வேலாயுதம் குழு!
» ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

» காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் துருப்பினர் இடையே துப்பாக்கி மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum