தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கைவைப்பது நியாயமா?

Go down

 முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கைவைப்பது நியாயமா? Empty முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கைவைப்பது நியாயமா?

Post  ishwarya Tue Apr 30, 2013 5:57 pm

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை இழிவுபடுத்தியும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளை கேலி செய்தும், நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சிங்கள அடிப்படைவாதிகள் பொதுபலசேனா, சிங்கள ராவய என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இச்சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர் மார்க்க பீடமான ஜம் மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது எம் இதயம் ரணகளமாகியும் நாம் பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக் கூடாதே என்பதில் அக்கறையாக இருந்தோம்.

ஹலால் விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும் புழுகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம்.

ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது

1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ஹலால் சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு அவர்களிடம் இருந்த பலமோ அல்லது அதிகாரமோ என்னவென்று கூறமுடியாது. எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா?

2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா?

3. ஆகக் குறைந்தது இவ்வளவு போராட்டத்தை நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர) ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா?

4. ஹலால் சான்றிதழைப் பெறுகின்ற வர்த்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்சிப்பது எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா?

5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக் கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால் அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன் வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா?

6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச்
சொல்லியிருக்கின்றார்கள் என்றால் அதையாவது கூறமுடியுமா?

7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா?

8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம் என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?

9. இந்நாட்டில் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன் மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா என்று அவர் கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum