லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடால் விலகினார்
Page 1 of 1
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடால் விலகினார்
லண்டனில் இன்னும் சில நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கு பெறுவதிலிருந்து டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ரஃபேல் நடால் லண்டன் ஒலிம்பிக்ஸில் போட்டியிடும் நிலையில் தான் இல்லை என்று அறிவித்துள்ளார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த முடிவை எடுத்த தருணம் மிகவும் வருத்தமான ஒன்று என்றும் நடால் தெரிவித்துள்ளார்.
26 வயதாகும் நடால் தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் இதுவரை 11 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியை அவர் ஏந்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது நடால்
சுயநலமாக சிந்திக்காமல், ஸ்பெயினுக்கு விளையாட்டுத் துறையில் எது நல்லதோ அது குறித்தே தான் சிந்தித்ததாகவும், அதன் காரணமாக தன்னைவிட நல்ல உடல் தகுதியுடன் தயார் நிலையில் இருக்கும் வேறு ஒருவர் நாட்டின் சார்பில் பங்குபெற்றால் அது நல்லது என்று கருதியே இந்த முடிவுக்கு வந்ததாகவும் ரஃபேல் நடால் கூறுகிறார்.
இரு முறை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நடால், தொடர்ந்து கால் முட்டியில் ஏற்படும் பிரச்சினைகளால் அவதியுற்று வருகிறார்.
உலக ஆடவர் தரவரிசையில் தற்போது மூன்றாவது இடத்தில் ரஃபேல் நடால் இருக்கிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 8 ஆயிரம் கிலோவில் லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள்!
» பரதேசியிலிருந்து விலகினார் பூஜா
» இரண்டு வழக்குகளிலிருந்து நீதியரசர் காமினி அமரதுங்க விலகினார்
» ஷங்கர் படம் - விலகினார் சமந்தா
» பாரதிராஜா படம் – விலகினார் பார்த்திபன்
» பரதேசியிலிருந்து விலகினார் பூஜா
» இரண்டு வழக்குகளிலிருந்து நீதியரசர் காமினி அமரதுங்க விலகினார்
» ஷங்கர் படம் - விலகினார் சமந்தா
» பாரதிராஜா படம் – விலகினார் பார்த்திபன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum