தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் பாடிய பப்பி லக‌ரி

Go down

தமிழில் பாடிய பப்பி லக‌ரி Empty தமிழில் பாடிய பப்பி லக‌ரி

Post  ishwarya Mon Mar 11, 2013 1:50 pm


இந்தியின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லக‌ரி தமிழில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அ‌ஜ்மல் ஹீரோவாக நடிக்க கருப்பம்பட்டி என்றொரு படத்தை தொடங்கியது நினைவிருக்கிறதா? ஃபேஸ்புக் யுகத்தில் இதென்ன கருப்பம்பட்டி என்று புருவத்தை உயர்த்தியவர்கள் அப்போது அதிகம். கிணற்று கல்லாகக் கிடந்த அந்தப் படத்தை மீண்டும் தூர் வாருகிறார்கள்.

பிரபு ராஜ சோழன் இயக்கும் இந்தப் படத்துக்கு கண்ணன் இசையமைக்கிறார். இவர் தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தவர். கபிலன் எழுதிய நாட்டி ராஜா என்ற பாடலை பப்பி லக‌ரி பாடினால் நன்றாக இருக்கும் என அவரது அனுமதிக்காக டியூனை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பப்பி லக‌ரிக்கு டியூன் பிடித்துவிட்டது.

அப்புறமென்ன... அவரை சென்னைக்கு அழைத்து அலைக்கழிப்பானேன் என்று இவர்கள் மும்பை சென்று பாடலை பதிவு செய்து திரும்பியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியினால் ஏற்பட்ட நன்மை என்னவென்றால், கலாவதியாகிப் போனதாக கருதப்பட்ட கருப்பம்பட்டி இன்னமும் அண்டர் புரொடக்சனில்தான் இருக்கிறது என்பது ஊருக்கு‌த் தெ‌ரிய வந்திருக்கிறது.
கருப்பம்பட்டி, பப்பி லகரி பாடல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி
» பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி
» பப்பி லஹரி பாடிய 'நாட்டி ராஜா ராஜா..'
» தமிழ் ரசிகர்கள் இனிமையானவர்கள்: பப்பி லஹிரி
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum