ஒலிம்பிக் முடிந்தும் ஊருக்கு போக விருப்பமில்லை"
Page 1 of 1

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற வந்த ஆப்பிரிக்க நாடான கேமரூனின் ஐந்து வீரர்கள் பிரிட்டனிலேயே தங்கியிருக்க அனுமதி கோரப் போவதாக கூறுகிறார்கள்.
இந்த ஐந்து குத்துச் சண்டை வீரர்களும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளின்போது தோல்வியடைந்தால் அவர்களது குத்துச் சண்டை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று தங்களை கேமரூனின் ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் அச்சுறுத்தியதாக, அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனிலேயே தொடர்ந்து தங்கியிருந்து தொழில்முறை குத்துச் சண்டை வீர்ர்களாவதே தங்களது விருப்பம் என்று அந்த ஐவரின் சார்பில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரக் காரணங்கள்?
கேமரூன் குத்துச் சண்டை வீரர் எஸோம்பா
ஆனால் இந்த ஐந்து குத்துச் சண்டை வீரர்களும் பொருளாதார காரணங்களுக்காகவே, பிரிட்டனில் குடியேற விரும்புவதாக தாங்கள் சந்தேகிப்பதாக கேமரூனின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கடந்த வாரம் இதே நாட்டின் ஒரு நீச்சல் வீரரும் மகளிர் கால்பந்து அணியின் ஒரு உறுப்பினரும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து காணாமல் போயினர்.
இவர்களை ஒரு இரகசிய இடத்தில் பிபிசி செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது தமது நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு இல்லை என்று இவர்கள் சார்பில் பேசும் குத்துச் சண்டை வீரர் எஸோம்பா தெரிவித்தார்.
தங்களை தொழில் ரீதியில் தத்துஎடுத்து, நீண்ட கால அடிப்படையில் பிரிட்டனில் தங்கியிருக்க வழி செய்யும் ஒரு அனுசரணையாளரை தாங்கள் தேடுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கேமரூன் நாடு தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் தாங்கள் பிரிட்டனில் தங்க விரும்பவில்லை என்று கூறும் அவர், தாம் விரும்பும் விளையாட்டை முன்னெடுக்கவே இங்கு இருக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.
அச்சம்
ஒலிம்பிக் துவக்க விழாவில் கேமரூன் வீரர்கள்
தமது நாட்டுக்கு தாங்கள் திரும்பினால், தம்மால் இனி குத்துச் சண்டை பயிற்சிகளை செய்ய முடியாது என்றும், தொழில்முறை ரீதியில் போட்டியிட முடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இவர்கள் அனைவரும் பொய் பேசுகிறார்கள் என்று லண்டன் ஒலிம்பிக்ஸுக்கு வந்துள்ள கேமரூன் அணியின் தலைவர் டேவிட் ஓஜாங் தெரிவிக்கிறார்.
அவர்கள் ஒருபோதும் அச்சுறுத்தப்படவில்லை என்று முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துவதாகவும் ஓஜாங் கூறுகிறார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீரவில்லை-அமிதாப்
» சில்க்காக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா
» ஊருக்கு ஒரு மனிதர்
» ஒலிம்பிக் ஹாக்கி: பாகிஸ்தான் படுதோல்வி
» லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடால் விலகினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum