இருபது 20: இறுதிப் போட்டிக்குள் இலங்கை அணி
Page 1 of 1

இருபது இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வென்ற இலங்கை அணி வரும் 7-ம் திகதி நடக்கவுள்ள இறுதிப் போட்டிக்குத் தயாராகிவருகிறது.
கொழும்பு கெத்தாராமை பிரேமதாஸ மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் மட்டைபிடித்த இலங்கை அணி 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 139 ஓட்டங்களையே குவித்திருந்தது.
பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி, இலங்கை அணியின் லசித் மாலிங்க மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் 7 விக்கெட்டுக்களை இழந்து இறுதி ஓவரில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இருபது 20 சர்வதேச போட்டியின் நிலைமைகளைப் பொருத்தவரை, கடைசி 3 ஓவர்களில் 32 ஓட்டங்களை மட்டுமே குவிக்க வேண்டிய சாதகமான நிலைமையை நோக்கி பாகிஸ்தான் அணி நகர்ந்துகொண்டிருந்தபோது,அஜந்த மெண்டிஸும் லசித் மாலிங்கவும் அடுத்தடுத்து 18-ம், 19-ம் ஓவர்களில் முறையே 5 மற்றும் 4 ஓட்டங்களை மட்டுமே கொடுத்ததால் பாகிஸ்தானி அணி வீரர்களின் கனவு தகர்ந்துபோனது.
கடைசி ஓவரை வீசிய நுவன் குலசேகர எந்தவிதமான அழுத்தங்களுமின்றி பந்துவீசி வெறும் 7 ஓட்டங்களை மட்டுமே கொடுத்த நிலையில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இலங்கை அணியின் இடதுகை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மாலிங்கவும் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். மெண்டிஸும் அபாரமாக பந்துவீசி 27 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்தன 7 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை குவித்தார். திலகரட்ண டில்ஷான் 35 ஓட்டங்களை எடுத்தார்.
குமார் சங்கக்கார 11 பந்துகளுக்கு முகங்கொடுத்து 18 ஓட்டங்களை குவித்தனர்.
பாகிஸ்தான் அணியில் மொஹமட் ஹாஃபீஸ் 42 ஓட்டங்களை எடுத்தார்.
இம்ரான் நசீர் 20 ஓட்டங்களையும் உமர் அக்மால் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் குவித்தனர்.
சயீட் அஜ்மால், ஷஹீட் அப்ரிடி, மொஹமட் ஹாபீஸ் மற்றும் உமர் குல் ஆகிய நால்வரும் ஆளுக்கொரு விக்கெட் என இலங்கை அணியின் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
மற்றைய அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
இதில் வெற்றிபெறும் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி!
» கிரிக்கெட்: இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» இந்தியாவில் கடுங்குளிருக்கு மேலும் இருபது பேர் பலி
» மானாட மயிலாட இறுதிப் போட்டியில் ஜெயம் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum