டி20:கெய்ல் புயலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோற்றது
Page 1 of 1

இலங்கையில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு நுழையப் பெரிதும் உதவியது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மேற்க்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடும்.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
கொழும்பிலுள்ள பிரேமதாஸ விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு முடிவடைந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.
நாணயச் சுண்டில் வெற்றிபெற்ற அந்த அணி முதலில் ஆடத் தீர்மானித்தது.
தமது 20 ஓவர்களில் அந்த அணி நான்கு ஆட்டக்காரர்களை இழந்து 205 ஓட்டங்களை எடுத்தது.
ஓட்ட மழை
துவக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், சார்லஸும் களம் இறங்கினர். இதில் சார்லஸ் 10 ஓட்டஙகள் எடுத்த நிலையில் சார்ல்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து ஆடவந்த மார்லன் சாமுவேல்ஸும் கெயிலும் அதிரடியான ஓட்டங்களை அதிகரித்தனர்.
ஒரு முனையில் கெயில் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்க மறுமுனையில் அடுத்து ஆடவந்த ட்வைன் பிரேவோவும், கெய்ரன் பொலார்டும் தமது பங்குக்கு ஓட்டங்களை குவித்த வண்ணம் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிக்ஸர்களையும், பவுண்ட்ரிகளையும் அடித்த வண்ணம் இருந்தனர்.
கிறிஸ் கெயில் 41 பந்துகளில், 6 சிக்ஸர்களும் 5 பவுண்ட்ரிகளுடன் 75 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது, இந்த அரையிறுதிப் போட்டியின் சிறப்பம்சமாகும்.
பின்னடடைவு
206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணியால், எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
முதல் ஓவரின் கடைசிப் பந்தில் சாமுவேல் பத்ரியின் பந்தில் டேவிட் வார்ணர் ஆட்டமிழக்க ஆஸி அணியின் சர்வு தொடங்கியது.
பின்னர் ஷேண் வாட்சன், மைக் ஹஸ்ஸி, கேமரன் வைட், டேவிட் ஹஸ்ஸி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் ஏழு ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் ஆஸி அணியினர் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தனர்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த ஆஸி அணியை, அதன் தலைவர் ஜார்ஜ் பெயிலி மட்டுமே சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்து ஓரளவுக்கு தூக்கி நிறுத்தினார்.
பொலார்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்த பெய்லி 4 சிக்ஸர்களும், 6 பவுண்ட்ரிகளும் அடித்தார்.
அவரைத் தவிர அந்த அணியில் வேறு யாருடைய ஆட்டமும் எடுபடவில்லை. இறுதியாக அந்த அணி 131 ஓட்டங்களில் சுருண்டது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் விளையாடி இந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மேற்க்கிந்திய தீவுகளின் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கும் என கெய்ரன் பொலார்ட் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டி20: இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
» டி20 உலகக் கோப்பை: இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன் இலங்கை பலப்பரீட்சை
» ஐ.பி.எல். தொடரில் 175 ரன்கள் குவித்து கிறிஸ் கெய்ல் புதிய சாதனை
» ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு
» இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum