கிரிக்கெட்: இந்தியா படுதோல்வி
Page 1 of 1
கிரிக்கெட்: இந்தியா படுதோல்வி
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி இந்திய அணியை பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தது.
இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது.
அகமதாபாதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாண்டி பனேசர் மற்றும் கிரேம் ஸ்வான் இந்திய அணியை தணறடித்தனர். இப்போட்டியில் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் இங்கிலாந்து விளையாடியுள்ள 14 டெஸ்ட் போட்டிகளில், இங்கிலாந்து வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
இந்தப் போட்டித் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.
மும்பை போட்டி விரேந்தர் ஷேவாகின் 100 வது டெஸ்ட் போட்டி, அதில் அவர் 39 ஓட்டங்களே எடுத்தார்.
மும்பையில் நடைபெற்ற முடிந்த இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்ஸன் அறிவிக்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் எடுத்த 186 ஓட்டங்கள் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான பிரஞ்யான் ஓஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினாலும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களைப் போல் சாதனையை படைக்க முடியவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» மகளிர் கிரிக்கெட் : வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா
» ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்
» India vs England 4th Test Live Streaming - இந்தியா மற்றும் இங்க்லாந்து கிரிக்கெட் போட்டி நேரடியாக பார்க்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum