கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி
Page 1 of 1
கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி
இந்திய கிரிக்கெட் அணி மேலும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் இன்று(17.12.12) முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தாலும், தொடரை இங்கிலாந்து 2-1 எனும் கணக்கில் வென்றது.
இந்திய மண்ணில் இங்கிலாந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வென்றுள்ளது.
இதற்கு முன்னர் டேவிட் கோவர் தலைமையிலான அணி 1984-85 ல் நடைபெற்ற தொடரில் வெற்றியீட்டியது.
இந்தத் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் யார் யார் இடம்பெறுகிறார்கள் என்பது குறித்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மொஹிந்தர் அமர்நாத் அண்மையில் அணியின் தலைவராக இருக்கும் தோனி அப்பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று வெளியிட்ட கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
டெண்டூல்கர் மீண்டும் ஏமாற்றம்
சச்சினின் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுந்துள்ளன
நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டூல்கர் இந்தத் தொடரில் மிகக் குறைவான ஓட்டங்களையே எடுத்தார்.
இதையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா எனவும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
நாக்பூரில் முடிவடைந்த கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளன்று இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஜோனதான் டிராட் மற்றும் இயன் பெல் ஆகிய இருவரும் சதமடித்தது குறிப்பிடத்தகுந்தது.
போட்டியில் உறுதியாக எந்த முடிவும் ஏற்படாது என்பதை உணர்ந்த இரு அணிகளும், வெற்றி தோல்வியின்றி போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டன.
இந்திய மண்ணில் எட்டு ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்துள்ளது இதுவே முதல் முறை.
கடந்த 25 ஆண்டுகளில் இதைவிட மோசமான டெஸ்ட் தொடர் தோல்விகளையும் இந்தியா கண்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்
» இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என மட்டுவில் நையாண்டி செய்த ரணில்!
» கிரிக்கெட்: இந்தியா படுதோல்வி
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» மகளிர் கிரிக்கெட் : வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum