குடல் நோய்கள்
Page 1 of 1
குடல் நோய்கள்
குடல் நோய்கள்:
வயிற்றில் உண்டாகும் நோய்கள் பித்த சம்பந்தப்பட்டு உண்டாவதற்கு,வாந்தி வயிற்றுப்புண் ,வயிற்றில் எரிச்சல் போன்ற உஷ்ணகுறிகளைக் காட்டும். வாத சம்பந்தப்பட்ட குடல் கோளாறுகளுக்கு வயிற்றில் உப்புசம் காற்று நிறைந்து காணுதலாகும்.வாத சம்பந்தமாக வயிற்றில் ஏற்படும் நோய்க்குக் குடல் நோய்(சூலை நோய்) என்று பெயர்.இந்த நோயானது பல பிரிவுகளைக் கொண்டது.குறிப்பாக1.குடல்வால் வாதம்2. பித்தப்பைக்கல் 3.சிறுநீரகக்கல்4. அடிவயிற்று வாய்வு 5.ஈரல் வீக்கம் போன்ற பல காரணங்களினால் இந்த நோயானது உண்டாகிறது.
குறிகுணங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்வு அதன் அடிவயிறு முழுவதும் வலி பரவி இருக்கும்.அடிவயிற்றுப் பகுதியில் வாய்வு சேர்வதால் இவ்வித வலி உண்டாகிறது.வாய்வுப்பிடிப்பு திடீரென்றும் அல்லது மெதுவாகவும் தோன்றலாம்.பசியின்மையும்,உண்ட உணவு செரிமானம் இல்லாமலும் இருக்கலாம்.இதனால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.அதை போலவே பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் இந்த வலியானது பரவுவதற்கு வாய்ப்புமிகுதி.இதன் தீவிர நிலையில் வியர்வை உடலெல்லாம் கொட்டும்.சிலசமயம் வாந்தியும் மயக்கமும் ஏற்படுவதும் உண்டு.
மருந்து 1 :ஜாதி பலாதி சூரணம்
ஜாதிக்காய்=20 கிராம்
வாய்விளங்கம்=20 கிராம்
சித்திரமூலப்பட்டை=20 கிராம்
கிராம்பு =20 கிராம்
ஏலக்காய்=20 கிராம்
இலவங்கப்பத்திரி=20 கிராம்
இலவங்கப்பட்டை=20 கிராம்
சிறு நாகப்பூ=20 கிராம்
கற்பூரம் =20 கிராம்
சந்தனம்=20 கிராம்
எள் =20 கிராம்
மூங்கில் உப்பு=20 கிராம்
கிரந்தி தகரம்=20 கிராம்
நெல்லி வற்றல்=20 கிராம்
தாளிச பத்ரி=20 கிராம்
திப்பிலி=20 கிராம்
கடுக்காய்த்தோல்=20 கிராம்
சோம்பு =20 கிராம்
சுக்கு=20 கிராம்
மிளகு=20 கிராம்
சர்க்கரைத்தூள் =400 கிராம்
செய்முறை:
மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் சுத்தம் செய்து,சர்க்கரை,கற்பூரம் நீங்கலாக வெயிலில் காய வைத்து, இடித்து நுண்ணிய பொடியாகச் சலித்துக் கொள்ளவும். பிறகு அந்தப் பொடியில் சர்க்கரையையும்,கற்பூரத்தையும் பொடித்து ஒன்றுபட கலந்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
தேக்கரண்டி பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டால் வாய்வினால் ஏற்படும் தொல்லை குறையும். பேதி, சீதபேதி இருக்கும் சமயத்தில் கொடுப்பது நல்லது.
தீரும் நோய்கள்:
வாய்வு,மலச்சிக்கல்,பேதி,சீதபேதி
மருந்து 2:ஜாதி பலாதி சூரணம்
இந்துப்பு (வறுத்தது) =10 கிராம்
ஓமம் =30 கிராம்
குரோசாணி ஓமம் =20 கிராம்
திப்பிலி =40 கிராம்
சுக்கு =50 கிராம்
கடுக்காய்த் தோல் =150 கிராம்
செய்முறை:
மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் நன்றாக சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, இடித்து நன்றாக நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
1/2-1 டீஸ்பூன் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளை சாப்பிடுவதால் வாய்வு குறையும். மலச்சிக்கல் நீங்கும். அதனால் ஏற்படும் வலிகள் சமனம் அடையும்
தீரும் நோய்கள்:
வாய்வு,மலச்சிக்கல்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum