குடல் வாய்வு
Page 1 of 1
குடல் வாய்வு
குடல் வாய்வு:
வாய்வு என்பது காற்றின் அம்சத்தைக் குறிக்கக் கூடியது.உடலிலே உஷ்ணம்,எரிசக்தி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு சக்தியையும் உடல் முழுவதும் பரவ செய்து செவ்வனே இயங்க வைக்கிறது வாய்வு.உஷ்ண சக்தியான பித்தம்,குறையுக்கால்,உடலின் வன்மை குறைந்து வாய்வானது உடலை ஆக்கிரமித்துக் கொள்கிறது.இந்த வாய்வு தானே சஞ்சரிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.அது எங்கு வேண்டுமானாலும் உடல் முழுவதும் சுற்றி வரக் கூடியது.இவ்வாறு நரம்புகளில்,எலும்புகளில்,வயிற்றுப் பகுதிகளில் இந்த வாய்வு ஏற்படுகிறது.
குறிகுணங்கள்:
வயிற்றில் உண்டாகும் வாய்வானது ஜீரணத்தை பாதித்து உணவு உண்டது போன்ற உணர்வு, பசியின்மை,தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை, மறதி,எரிச்சல் சுபாவம், பலகீனம், மார்புப் பகுதியில் வலி,முதுகின் மேல் பகுதியில் வலி போன்ற குறிகளை உண்டாக்கும். எலும்பு மற்றும் நரம்புகளில் உண்டாகும் வாய்வினால் உடலில் வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.
மருந்து 1:பஞ்ச தீபாக்னி சூரணம்
தேவையானப் பொருட்கள்:
சுக்கு=50 கிராம்.
மிளகு=50 கிராம்.
திப்பிலி=50 கிராம்.
ஏலம்=50 கிராம்.
சீரகம்=50 கிராம்.
சர்க்கரை=250 கிராம்.
செய்முறை:
சுக்கு,மிளகு,திப்பிலி,ஏலம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சுத்தம் செய்து,லேசாக வறுத்து இடித்து மெல்லிய சல்லடையில் சலித்து,பின்னர் சர்க்கரையையும் இடித்து சலித்து ஒன்றாகக் கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு உருக்கிய நெய் அல்லது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்றில் வாய்வு, உடல் வலி,பசியின்மை,ருசியின்மை,அஜீரணம்,அஜீரண பேதி ஆகியவை நீங்கும்.
மருந்து 2:சிவதைச் சூரணம்
தேவையானப் பொருட்கள்:
கிராம்பு=10 கிராம்.
கடுக்காய் தோல்=10 கிராம்.
நெல்லி வற்றல்(கொட்டை நீக்கியது)=10 கிராம்.
தான்றிக்காய்(கொட்டை நீக்கியது)=10 கிராம்.
சுக்கு=10 கிராம்.
மிளகு=10 கிராம்.
திப்பிலி=10 கிராம்.
ஏலம்=10 கிராம்.
சிறுநாகப்பூ=10 கிராம்.
கோரைக்கிழங்கு=10 கிராம்.
சிவதை வேர்ப்பட்டை=40 கிராம்.
செய்முறை:
கிராம்பு,கடுக்காய் தோல் ,நெல்லி வற்றல்,தான்றிக்காய்,சுக்கு,மிளகு,திப்பிலி,ஏலம்,சிறுநாகப்பூ,கோரைக்கிழங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து இளம் வறுப்பாக வறுத்து,சிவதை வெற்ப பட்டையைப் பாலில் வேக வைத்து உலர்த்தியவுடன் எல்லாவற்றையும் இடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு தேன் அல்லது சர்க்கரை கலந்த தண்ணீருடன் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்றில் உப்புசம்,வாய்வு,வாய்வினால் ஏற்படும் மலக்கட்டு,அசதி ஆகியவை நீங்கும்.
மருந்து 3:
தேவையானப் பொருட்கள்:
துளசி சாறு=1 டீஸ்பூன்.
இஞ்சி சாறு=1 டீஸ்பூன்.
தேன்=1 டீஸ்பூன்.
உபயோகிக்கும் முறை:
இவற்றை சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வேளை குடிக்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்றில் உப்புசம்,வாய்வு,உடல் வலி போன்றவை நீங்கும்.
மருந்து 4:
தேவையானப் பொருட்கள்:
துளசி சாறு=1 டீஸ்பூன்.
மிளகு பொடி=1/4 டீஸ்பூன்.
தேன்=1 டீஸ்பூன்.
உபயோகிக்கும் முறை:
இவற்றை சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்றில் வாய்வு,மார்பு வலி,வயிற்று வலி போன்றவை நீங்கும்.
மருந்து 5:பஞ்ச கோல சூரணம்
தேவையானப் பொருட்கள்:
திப்பிலி=10 கிராம்.
திப்பிலி மூலம்=10 கிராம்.
சுக்கு=10 கிராம்.
கொடி வேலி வேர்ப்பட்டை=10 கிராம்.
செவ்வீயம்=10 கிராம்.
செய்முறை:
இவற்றை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து,பொடி செய்து,நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
கால் முதல் அரை டீஸ்பூன் வரை,வெந்நீர் அல்லது மோருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
வாய்வு,வயிற்றுவலி,பசியின்மை,உடம்புவலி,கணுக்கால் வலி ஆகியவை நீங்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum