இரைப்பு நோய்
Page 1 of 1
இரைப்பு நோய்
இரைப்பு நோய்:
இது சாதாரணமாகச் சீதளதோஷம் மேலோங்கி, கபத்தை விருத்தி செய்து, மூக்கு, தொண்டை, சுவாச உறுப்புகள், நுரையீரல் ஆகிய பகுதிகளைக் கேடடையச் செய்து நோயை உண்டாக்குகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. வாய்வு தோஷமானது விகல்பம் அடைந்து சிரண உறுப்புகளை விரிவடையச் செய்து வயிறு, குடல் பகுதிகளில் வாய்வு சஞ்சரித்து, அஜீரணம், மலச்சிக்கல், சில சமயம் பேதி போன்ற உபாதைகளை உண்டாக்கும்.மேலும் மூச்சுத்திணறல், மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை உண்டாவதும் உண்டு. இந்த சுவாச நோய்கள் ஈளை நோய், இரைப்பு நோய் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது வாத(வாய்வு) இரைப்பு, பா இரைப்பு நோய், வாத,கப இரைப்பு நோய், முக்குற்ற இரைப்புநோய், மந்தார காசம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
நோய் வர காரணங்கள்:
ஒவ்வாமை என்ற அலர்ஜி, உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள், புகை, தூசி, இரசாயனம், சிமெண்டு, சாம்பிராணி போன்றவற்றின் நெடி ஆகியவற்றால் உண்டாகி, இரைப்பு நோய் உண்டாகிறது. மேலும் வாய்வைத் தூண்டுகின்ற கிழங்கு வகைகள், கசப்பு, காரம், போன்ற பொருந்தாத உணவுகளாலும் இரைப்பு நோய் உண்டாகும். அமீபயாஸிஸ் என்ற வயிற்றுக் கடுப்பு நோயினாலும் இரைப்பு நோய் வருகிறது.
1. வாய்வினால் வரும் இரைப்பு: அஜீரணத்தால் ஏற்படுகிறது. வாய்வைத் தூண்டும் உணவு மற்றும் கிழங்கு போன்றவைகளால் ஏற்படும்.
2. கப இரைப்பு நோய்: மழை, குளிர், பனிக்காலம், குளிர்ந்த காற்று வீசும் காலங்களில் நோயின் வன்மை அதிகமாகும். குளிர்ந்த உணவுகள், குளிர் பானங்கள், புளித்த தயிர், பழைய அன்னம் போன்ற உணவுகளை உட்கொள்வதால் இது ஏற்படுகிறது.
3. கப வாய்வு, இரைப்பு நோய்: கபமும், வாய்வும் தன்னிலையில் கேடடைந்து, நோயானது தோன்றுகிறது. மூச்சுத்திணறல் உண்டாகி வயிற்றில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.மேற்கூறிய உணவுகளை உட்கொள்ளவதால் ஏற்கடுகிறது.
4. முக்குற்ற இரைப்பு நோய்: இது வாய்வு, பித்தம், கபம் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுவதால் ஏற்படுகிறது.
குறிகுணங்கள்:
சீதளம் என்ற கபம் தலைக்கு ஏறி மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற குறிகள் உண்டாகி, சில சமயம் தானே சரியாகிவிடும். பிறகு, அந்த கபமானது, நுரையீரல் பகுதியில் இறங்கி, மூச்சு அடைப்பு, மூச்சுத்திணறல் போன்றவைகள் ஏற்படும்.
மருந்து 1: கப தோஷ கஷாயம்
தேவையானப் பொருட்கள்:
சிறு தேக்கு = 50 கிராம்
கோரக்கிழங்கு = 50 கிராம்
பற்பாடகம் = 50 கிராம்
சிறுகாஞ்சோரி = 50 கிராம்
ஆடாதோடை (காய்ந்தது) = 50 கிராம்
நில வேம்பு = 50 கிராம்
சீந்தல் கொடி = 50 கிராம்
கண்டங்கத்திரி = 50 கிராம்
கோஷ்டம் = 50 கிராம்
திப்பிலி = 50 கிராம்
சுக்கு = 50 கிராம்
செய்முறை:
அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து பெருந்தூளாக இடித்து எடுத்து வைத்துக்கொண்டு 50 கிராம் பொடியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து சிறு தீயாக வைத்து 150 மி.லியாக சுண்ட காய்ச்சி மருந்துகளை கசக்கி பிழிந்து வடிகட்டி 1 வேளைக்கு 50 மி.லி வீதம் குடித்துவரவும்.
மருந்து 2: லவங்காதி சூரணம்
தேவையானப் பொருட்கள்:
கிராம்பு = 10 கிராம்
பச்சைக் கற்பூரம் = 10 கிராம்
ஏல அரிசி = 10 கிராம்
லவங்கப்பட்டை = 10 கிராம்
சிறுநாகப்பூ = 10 கிராம்
ஜாதிக்காய் = 10 கிராம்
வெட்டி வேர் = 10 கிராம்
சுக்கு = 10 கிராம்
கருஞ்சீரகம் = 10 கிராம்
அகர் கட்டை = 10 கிராம்
மூங்கில் உப்பு = 10 கிராம்
ஜடாமாஞ்சி = 10 கிராம்
திப்பிலி = 10 கிராம்
சந்தனம் = 10 கிராம்
வெள்ளாம்பல் = 10 கிராம்
வால் மிளகு = 10 கிராம்
கிரந்தி தகரம் = 10 கிராம்
செய்முறை:
பச்சை கற்பூரத்தை தவிர மற்ற பொருட்களை சுத்தம் செய்து, வெயிலில் காய வைத்து நுண்ணிய பொடிகளாக இடித்து, சலித்து கொள்ளவும். பச்சை கற்பூரத்தை தனியாக பொடித்து கலக்கவும். மேலும் 170 கிராம் கற்கண்டைப் பொடி செய்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
அரை அல்லது 1 டீஸ்பூன் 1 நாளைக்கு 2-3 வேளை தேன் அல்லது தண்ணீருடன் கலந்து சாப்பிடவும். இதனால் மூச்சுத்திணறல், மூச்சு இழுப்பு, இருமல், சளி, காசம், சுவாச நோய்கள் முதலியன நீங்கும்.
மருந்து 3: லவங்காதி சூரணம் 2
தேவையானப் பொருட்கள்:
கிராம்பு = 25 கிராம்
ஜாதிக்காய் = 25 கிராம்
திப்பிலி = 25 கிராம்
மிளகு = 50 கிராம்
சுக்கு = 400 கிராம்
சர்க்கரை = 525 கிராம்
செய்முறை:
சீனியை தவிர மற்ற பொருட்களை வெயிலில் காய வைத்துச் சுத்தம் செய்து, இடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து, சீனியை பொடித்து ஒன்றாக அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளவும்
உபயோகிக்கும் முறை:
அரை அல்லது 1 டீஸ்பூன் வீதம் 1 நாளைக°கு 2-3 வேளை நெய் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிடுவதால் இருமல், பசியின்மை, சுவாசம், அக்னிமாந்தம், அஜீரணம் ஆகியவை தீரும்.
மருந்து 4 :
ஆடாதோடை இலைகளை சுத்தம் செய்து தட்டி சாறு எடுத்து 2 டீஸ்பூன் சாற்றுடன் 2 சிட்டிகை திப்பிலி பொடியையும் 1 டீஸ்பூன் தேனையும் கலந்து 1 நாளைக்கு 3,4 வேளைகள் குடித்துவர இருமல், சுவாச நோய்கள் நீங்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக...
» இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக...
» இரைப்பு குறைய
» இரைப்பு குறைய
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum