மினி உசிலி கொழுக்கட்டை
Page 1 of 1
மினி உசிலி கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு, பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் -சிறிது. உசிலி தயாரிக்க, முழு உளுந்து - 1 கப், கடலைப் பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் -4, எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல்- அரை கப்.
எப்படிச் செய்வது?
மாவை நன்கு சலித்துக் கொள்ளவும். புது மாவாக இருக்க வேண்டும். 1 கப் மாவுக்கு, ஒன்றேகால் கப் அளவு தண்ணீர் எடுத்து உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்து, மிதமான தீயில் மாவைக் கொட்டி, கட்டி தட்டாமல் கிளறி, இறக்கி ஆற விடவும். பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து, ஆவியில் வேக வைக்கவும். இது கொழுக்கட்டை.
உசிலிக்குக் கொடுத்துள்ள பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, வடித்து, சிறிது உப்பு, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து, கரகரப்பாக அரைத்து, பிறகு சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், அரைத்த கலவை சேர்த்துத் தாளித்து, வதக்கவும். நன்கு வெந்து, உதிராக வரும் போது, அதில் கொழுக்கட்டைகளைச் சேர்த்துப் பிரட்டிப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum