மினி டோக்ளா
Page 1 of 1
மினி டோக்ளா
இட்லி மாவு & ஒன்றரை கப், கடலை மாவு & அரை கப், சின்ன வெங்காயம் & அரை கப், பச்சை மிளகாய் & 3, மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & சிறிது, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், மல்லித் தழை & சிறிது, சமையல் சோடா & 1 சிட்டிகை, பெருங்காயம் & சிறிது, தாளிக்க & கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் & கால் கப், சீரகம் & அரை டீஸ்பூன்.
கடலை மாவையும், சோடா உப்பையும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் வீட்டில் இருக்கும் இட்லி மாவும் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு மினி இட்லித் தட்டில் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். எண்ணெய் காய வைத்து, கடுகு, சீரகம், உளுந்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மினி இட்லிகளையும் கொட்டி, மல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இட்லித் தட்டில் வைக்க விரும்பாதவர்கள், குக்கர் தட்டில் மாவை ஊற்றி, ஆவியில் வேகவைத்து சிறு துண்டுகளாக போட்டும் தாளிக்கலாம். தயிர் அல்லது சாஸ் அல்லது சட்னி என எதனுடனும் சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum