தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப் ஜோடி குஷ்பு?

Go down

அமிதாப் ஜோடி குஷ்பு? Empty அமிதாப் ஜோடி குஷ்பு?

Post  ishwarya Sat Mar 09, 2013 4:29 pm


நமது ஆல் ரவுண்டர் அமிதாப்பச்சன் யார் யாருடன் நடிப்பார் என்றே தெ‌ரியவில்லை. இப்போதுதான் குழந்தைகளுக்கான மேகி விளம்பரத்தில் நடித்தார். அதற்குள் அடுத்த புராஜெக்ட். இது தென்னிந்தியா மொத்தமும். தமிழில் பிரபு, மலையாளத்தில் திலீப், தெலுங்கு, கன்னடத்தில் அங்குள்ள சூப்பர் ஸ்டார்கள் என்று மொழிக்கொரு நடிகருடன் நகைக்கடையொன்றின் புரட்சிப் போருக்கு குரல் கொடுக்கிறார்.

இந்த பிஸி ஷெட்யூலுக்கு நடுவில் நடிப்பும் உண்டு. இவருக்கு மட்டும் கடவுள் கடிகாரத்தில் நாற்பத்தெட்டு என்று எழுதி வைத்திருக்கிறாரோ என்னவோ.

ரேவதி வர்மா இயக்கும் இந்திப் படத்தில் அமிதாப் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி குஷ்பு என்று காற்றுவாக்கில் தகவல்கள் கசிகின்றன. ஆர்ப்பாட்டம், அடிதடி என்று மாநில அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு குழந்தைகளை விட்டு இந்தப் படத்தில் நடிக்க காரணம் அமிதாப்தான் என்கிறார்கள்.

அப்படியா மேடம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum