தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றம் ஒன்றே மாறாதது

Go down

 மாற்றம் ஒன்றே மாறாதது  Empty மாற்றம் ஒன்றே மாறாதது

Post  meenu Sat Mar 09, 2013 2:44 pm

‘‘பெண் ஒருவரிடம் இருந்த பத்து வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமல் போய்விட்டால், வீட்டைப்பெருக்கி விளக்கேற்றி அதைக் கண்டுபிடிக்கும் வரை
கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும் அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமல் போன வெள்ளிக்காசைக் கண்டு பிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கி றேன்’’ (லூக்கா 15: 8-10). காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இடையரின் கன்று ஒன்று காணாமல் போய்விட்டது. காடு முழுவதும் தேடி அலைந்தார். ஆயினும் கன்றைக் காண முடியவில்லை. காட்டுத் தெய்வங்களை நோக்கி, ‘‘என் கன்றைக் காட்டித் தந்தால் உங்களுக்கு ஓர் ஆட்டுக்குட்டியை பலியிடுவேன்’’ என்றார்.

காடு மேடெல்லாம் சுற்றிவிட்டு, ஒரு மலைக்குன்றை அடைந்தார். அங்கே சிங்கம், அவருடைய கன்றைக் கொன்று தின்று கொண்டிருந்தது. சிங்கத் தைக் கண்டதும் இடையர் திடுக்கிட்டார். பதறித் துடித்தார். ‘‘காட்டுத் தெய்வங்களே! என் கன்றைக் காட்டினால் ஆட்டுக்குட்டி அளிப்பதாகக் கூறினேன். இப்போது என் உயிரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டது. என்னைக் காப்பாற்றினால் கன்றோடு பெரிய எருதையும் பலியிடுவேன்’’ என்றார். நீங்களே பதில் சொல்லுங்கள், எது பெரிது, உயிரா, உடைமையா? இறைவன் எண்ணத்தை யாரால் அறிய முடியும்? சிறு துன்பம் வந்தால் துடிக்கிறோம். முறையிடுகிறோம். நாம் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுக்க வேண்டுமென்று கருதுகிறோம். கொடுக்காதபோது அவரைத் தூற்றுகிறோம்.

மயங்கிய மதியைக் கொண்டு இறைவன் அருளை அளக்க முயல்கிறோம். நமக்குத் தேவையான நல்லதை இறைவன் தவறாமல் அளிப்பார். நாம் இயன்ற மட்டும் நேர்மையுடன் செயலாற்ற வேண்டும். வீணான காரியங்களுக்காக இறைவனை வேண்டுதல் நல்லதல்ல. ஏதாவது ஒரு துரதிர்ஷ்டமோ அல்லது துயரமோ வந்து தாக்கினால் போதும், சிலர் மாய்ந்துபோய் உட்கார்ந்து விடுவார்கள். வாழ்க்கை அவ்வளவுதான் என்று அங்கலாய்த்துக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டு துவண்டு விழுந்து விடுவார்கள். வாழ்க்கையில் இனி ஒன்றுமே இல்லை என்று துவண்டுபோய் நம்பிக்கை இழந்து விடுவார்கள். துயர உணர்ச்சியின் தாக்கம், என்று தானாக வடிந்து செல்கிறதோ, அன்றுதான் அவர்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவார்கள். வாழ்க்கையின் உபயோகமான கால அவகாசங்கள் இப்படி வீணடிக்கப்படுகின்றன.

துயரங்களும் துரதிர்ஷ்டங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடத்தான் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, அவை எல்லாம் நம் விதிப்படி வந்துபோகும். நம் வாழ்க்கையின் ஒட்டு மொத்தமான நிகழ்வுகள் எல்லாம் கடவுளால் வடிவமைக்கப்பட்டு விட்டன. அவ்வப்போது நிகழும் காலகட்டங்களில் இந்தத் துயரங்கள் நம்மை வந்து தாக்குவதில் புதியதாகவோ, அசாதா ரணமாகவோ எதுவும் இல்லை. ஆகவே அவற்றினால் தாக்கப்படாமல் அவற்றை ஒப்புக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். அவற்றை சந்திக்கப் பழகு வோம். அவற்றிற்கு மரியாதை செய்வோம். இவை எல்லாம் இப்படி நடந்திருக்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டே காலத்தை துயர உணர்ச்சி யோடு கழிப்பவர்கள் ஏராளம்! மன அழுத்தங்கள் அவர்களைத் தொடர்ந்து தாக்கும். மன நோய்கள் தொடரும்.

எவ்வளவு சீக்கிரம் நாம் உண்மையைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நன்மை பயக்கும். தாக்க வந்த துயரத்தை பெரிதுபடுத்தாது ஒப்புக்கொண்டு நடந்தால் விரைவிலேயே அழுத்தங்கள் நீங்கி நம்முடனே நாம் சரியான பக்குவத்தோடு ஒப்புக்கொண்ட நிலைக்கு திரும்பி விடுவோம். தாக்க வரும் அபாயத்திற்கு நாம் நெளிவு சுளிவோடு வளைந்து கொடுத்து சகஜ நிலைக்குச் சீக்கிரம் திரும்ப வேண்டும். இந்த உலகில் காணப்படும் ஒரே உண்மை, இந்த மாற்றங்கள்தாம். அவற்றை நாம் எப்படித் தடுக்க முடியும்? வாழ்க்கை என்பது ஒரு ஆற்றைப்போல. ஆறு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே, ‘‘ஒப்புக்கொள்ளுங்கள்; அத் தோடு ஒத்துப் போங்கள்; மீண்டும் சகஜ நிலைக்கு விரைவில் திரும்புங்கள்’’ என்ற தாரக மந்திரத்தை உச்சரிப்போம். இதனால் துயரங்களினால் தொலைந்து போகவும் வேண்டாம்; முன்னேற்றங்கள் முடங்கவும் வேண்டாம். நமது வாழ்க்கையே ஒரு தடை ஓட்டப்பந்தயம்தான். நமக்கு எதிரான மனப்போக்கைக் கொண்டிருந்தால் நாமே நமக்கு மிகப் பெரிய தடையாகி விடு வோம். எதிரான மனப்போக்கு உடையவர்களுக்கு நட்பிலும் வேலையிலும் திருமண வாழ்விலும் உறவு முறையைத் தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினமாகும். அவர்களது மனப்போக்கு, மனக்கசப்புக்கும் வெறுப்புக்கும் அர்த்தமற்ற வாழ்க்கைக்கும் உடல்நிலை சீர்கேட்டிற்கும் மனஅழுத்தத்திற்கும் வழிவகுக்கும். ஆகவே அவர்கள் சமுதாயத்திற்கு பெரும் சுமையாகி விடுகின்றனர். மனித இயல்பானது பொதுவாக மாற்றங்களை எதிர்க்கும்; ஏற்க மறுக்கும்.

‘‘ஒருநாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்கு பற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், ‘யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்து சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமு ழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்’ என்றார்கள். யோவான் அவர்களைப் பார்த்து, ‘விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவ ரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங் களே சாட்சிகள்.
‘மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இதுபோன்றது; இம்ம கிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்.

எனது செல்வாக்கு குறைய வேண்டும்’ என்றார். ‘‘மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர், மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற் றியே இவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கி றார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அள வின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்து சேரும்’’ - (யோவான் 3: 25-36). கடவுளின் உதவியை யார் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். நாள்தோறும் நம் வேண்டுதலை செபத்தோடு சொல்லி, குறிப்பாக சோதனை வேளைகளில் மன்றாடுவோம். அவரது அருள் நம்மைத் திடப்படுத்தும். கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் அனைத்திலும் வெற்றி பெறுவர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum