தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன்!

Go down

கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன்! Empty கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன்!

Post  meenu Sat Mar 09, 2013 2:39 pm

விசுவாசம், நம்பிக்கை என்பது முழுமையான அர்ப்பணமாகும். இதயத்தை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்தான் உண்மையான விசுவாசி. முழு மையான அர்ப்பணத்தோடு நாம் வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும். உண்மையான விசுவாசியின் வாழ்க்கை, கடல் நடுவே கம்பீரமாக நிற்கும் பாறையைப் போன்றது. அலைகளால் அதை எதுவும் செய்யமுடியாது. வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்றினாலும் விசுவாசியின் விசுவாசம் குன்றி விடாது. அதனால்தான் ஆண்டவர், ‘‘உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக’’ எனக் கற்பித்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம், ‘‘யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?’’ என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ‘‘ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘என் ஆட்டுக்குட் டிகளைப் பேணி வளர்’’ என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ‘‘யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?’’ என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ‘‘ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘என் ஆடுகளை மேய்’’ என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ‘‘யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’’ என்று கேட்டார்.

உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ‘‘ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம் மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘என் ஆடுகளைப் பேணி வளர்’’ என்றார். ‘‘நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’’ என்றார். பேதுரு இறந்து எவ்வாறு கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ‘‘என்னைப் பின்தொடர்’’ என்றார்.

பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாகச் சாய்ந்துகொண்டு, ‘‘ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?’’ என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசு விடம், ‘‘ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?’’ என்று கேட்டார். இயேசு அவரிடம், ‘‘நான் வரும்வரை இவன் இருக்க வேண்டுமென நான் விரும்பி னால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா’’ என்றார். ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்றும் பேச்சு சகோதரர் சகோதரிகளி டையே பரவியது. ஆனால், இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘நான் வரும்வரை இவன் இருக்க வேண்டுமென நான் விரும்பி னால் உனக்கு என்ன?’ என்றுதான் கூறினார். இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி.

இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். (யோவான் 21: 15-25) இயேசு அற்புதங்களைச் செய்தது, மக்களுக்குத் தம்மிடமிருந்த விசுவாசத்தைப் பாராட்டியே ஆகும். தம் அற்புதச் சக்தியாலும், நிகழ்ச்சிகளாலும் மக் களுக்கிருந்த விசுவாசம் உறுதிபடவும் அதனால் அவர்கள் கடவுளிடம் மனம் திரும்பவுமே இயேசு இவ்வாறு அற்புதச் செயல்களை நிகழ்த்தினார். இத்த கைய மேலான நோக்கம் இல்லாதிருந்தால், அப்புதுமைகள் எல்லாம் பயனற்றவையாய் இருந்திருக்கும்.

மரணப் படுக்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த வயோதிகர் ஒருவர், அருகிலிருந்த தன் மகனை அழைத்து, தன் படுக்கையில் உட்காரச் சொல்லி அவனிடம் ஒரு பையைக் கொடுத்து, ‘‘இப்பையின் விளிம்புவரை செல்வக் குவியல் உள்ளது. நான் கூறப்போகும் நான்கு மந்திரச் சொற்களை நினை வில் வைத்துக்கொள். எப்பொழுதெல்லாம் இப்பையிலுள்ள செல்வங்களை நீ காலி செய்கிறாயோ அப்பொழுதெல்லாம் அந்த மந்திரச் சொற்களை உச்சரிப்பதன் மூலம், இந்தப் பை மீண்டும் முழுமை பெறும்’’ என்று கூறி அந்தச் சொற்களை அவன் காதில் கூறி இறைநிலை அடைந்தார். தந்தை தன்னை விட்டுப் பிரிந்த சோகத்தில் தன் மனச்சுமையைக் கண்ணீராக உதிர்த்து விடுவதா, இல்லை, செல்வக் குவியல் கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்வதா என்று தன்னிலை மறந்த அவ்வாலிபனின் நினைவிலிருந்து அந்த மந்திரச் சொற்கள் முழுமையாக மறைந்துவிட்டன.

கடுமையாக யோசித் துப் பார்த்தும் அந்த நான்கு சொற்களை அவனால் மீண்டும் உச்சரிக்க இயலவில்லை. அதை நினைத்துத் துவண்டு விடாமல் அந்த செல்வத்தை நற் காரியங்களுக்கும் ஏழை எளியோருக்கும் செலவிட்டான் அவ்வாலிபன். சிறிது சிறிதாக அப்பையின் கனம் குறையத் துவங்கியதும், தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள், தனக்குத் தெரிந்த ஞானிகளையெல்லாம் சந்தித்து, அந்த மந்திரப் பையைப் பற்றிக் கூறி, அந்த நான்கு வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்று கேட்டான். அனைவரும் தங்களுடைய அறிவுக்கேற்ப எழுதிக் கொடுத்தார்கள். அவற்றைக் குலுக்கிப் போட்டு அந்நான்கு வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘‘என் இறைவா, என்னை ஆசீர்வதியும்’’ என்று சொல்லச் சொன்னார் ஒருவர். அப்படிச் சொல்லியும் அந்தப்பை நிரம்பவில்லை. ‘‘இப்பை மீண்டும் செல்வத்தால் நிரம்பட்டும்’’ என்றார் ஒருவர். எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அன்று மாலை கதிரவன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது. வாலிபன் வருத்தத்தில் உடல் தளர்ந்து போனான். அவன் தந்தையார் கொடுத்துச் சென்ற பொக்கிஷம் அடியோடு மறைந்தது. அவன் தன்னுடைய அலட்சியத்தால் தன்னுடைய சக்தியை இழந்திருந்தான். தன் பைக்குள் எட்டிப் பார்த்தான். அதில் ஒரே ஒரு வெள்ளிக்காசு மட்டும் மீதி இருந்தது. அப்போது வீட்டு வாசலிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. ‘‘ஐயா, நான் பட்டினியால் து டித்துக்கொண்டிருக்கிறேன். ஏதாவது உதவி செய்வீர்களா?’’ என்றது அந்தக் குரல். உடல் மெலிந்து, முகம் வெளிரக் காணப்பட்ட அந்த வயதான பிச்சைக்காரர் நம்பிக்கையோடு கையை ஏந்திக்கொண்டு நின்றிருந்தார். இந்த வாலிபன் தான் பையிலிருந்து அந்தக் கடைசி வெள்ளிக்காசைத் தயங்காமல் அந்தப் பிச்சைக்காரரிடம் கொடுத்தான்.

பசியோடிருந்த அந்தப் பிச்சைக்காரர் காசைப் பெற்றுக்கொண்டவுடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும், ‘‘கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன்’’ என்று கத்தினார். இந்த வாலிபனும் பரவசத்துடன் துள்ளிக் குதித்துக் கத்தினான். ‘‘கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன், இவைதாம் என் தந்தையார் எனக்குச் சொல்லிவிட்டுச் சென்ற நான்கு மந்திரச் சொற்கள்’’ என்று கூறி, மீண்டும் மீண்டும், ‘‘கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறேன்’’ என்று உற்சாகமாகச் சத்தமிட்டான். அவன் இந்த வார்த்தைகளைச் சொன்னதும் அவனிடம் இருந்த பை, அவனுடைய தந்தை கொடுத்தபோது எப்படி இருந்ததோ அதேபோன்று விளிம்பு வரை காசுகளால் நிரம்பியது. இந்த நான்கு மந்திரச் சொற்கள் நமக்கும் பொருந்தும். நாம் அடிக்கடி அதை உச்சரிக்க உச்சரிக்க, நம் வாழ்வில் காண முடியாத அற்புதங்களையெல்லாம் காணலாம்; அனுபவிக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum