குருவின் நன்றி!!!
Page 1 of 1
குருவின் நன்றி!!!
ஓர் ஊரில் துறவி ஒருவர் தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் அடித்தது. இருப்பினும் அவர்கள் கால்களில் செருப்புகளை அணியமால் பயணத்தை தொடர்ந்தனர். அந்த பயணத்தின் போது, அவர்கள் செல்லும் வழிகளில் தாகம் மற்றும் பசியை ஆற்றுவதற்கு என்று எந்த ஒரு வசதியும் இல்லை.
மெதுவாக இரவும் நெருங்கியது. துறவியும் அவரது சீடர்களும் உணவு சாப்பிடாமல், தூங்குவதற்கு தயாராகினர். துறவி எப்போது இரவு தூங்கம் முன் கடவுளை வணங்கி தூங்கும் பழக்கம் உடையவர். அந்த இரவும் துறவி இறைவனிடம், "கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி" என்று சத்தமாக கூறினார். அதைக் கேட்ட சீடர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் துறவியிடம் "கடவுள் நமக்கு இன்று எதுவுமே தரவில்லை. பிறகு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
துறவி சிரித்துக் கொண்டே "இந்த உலகில் பிறந்த அனைவரும் கடவுளின் குழந்தைகள். அத்தகைய கடவுளுக்கு தன் குழந்தைகளுக்கு என்ன தர வேண்டும், என்ன தரக்கூடாது என்பது நன்கு தெரியும். அதேப்போல் தான் இன்றும் கடவுள் நமக்கு என்ன தர வேண்டுமோ, அதைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்கே! ஆகவே அவருக்கு நன்றி சொன்னேன்!" என்று தனது சீடர்களுக்கு சொல்லிப் புரிய வைத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குருவின் பார்வை!
» குருவின் இரு கொள்கைகள்!!!
» இமய குருவின் இதய சீடன்
» ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
» குருவின் உபதேச மொழிகள்
» குருவின் இரு கொள்கைகள்!!!
» இமய குருவின் இதய சீடன்
» ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
» குருவின் உபதேச மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum