நம்பிக்கையே நம்மைக் காக்கும் கவசம்
Page 1 of 1
நம்பிக்கையே நம்மைக் காக்கும் கவசம்
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யவீரு என்பவர் வந்து, அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தருவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர், மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர்.
அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், என்னைத் தொட்டவர் யார், என்று கேட்கிறீரே!” என்றார்கள்.
ஆனால், அவர் தம் மேலுடையைத் தொட்டவரை காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய் அஞ்சி நடுங்கிக் கொண்டு அவர் முன்வந்து விழுந்து, அவ்வாறு தொட்டது தான்தான் என்றும், அது பற்றியத் தன் நம்பிக்கையையும், அதனால் தான் குணமானதையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நோய் நீங்கி நலமாயிரு” என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆட்கள் வந்து அவரிடம், “உம்முடைய மகள் இறந்து விட்டாள்.
போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும் அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதை இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்,” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.ஆனால், அவர் அனை வரையும் வெளியேற்றிய பின் சிறுமியின் தந்தையையும், தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.
சிறுமியின் கையைப் பிடித்து, அவளிடம், “தலித்தாகூமி” என்றார். அதற்கு, ‘சிறுமியே உனக்குச் சொல்லுகிறேன்; எழுந்திரு,‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய் மறந்து நின்றார்கள். இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய் கட்டளையிட்டார். அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்” (மாற்கு 5:21-43). பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம் இது. செருப்புத் தயாரிக்கும் தொழிலாளியும் அவரது ஒன்பது வயது மகனும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஊசி ஒன்று சிறுவனின் கண்களில் குத்தி விட்டது. மருத்துவ வசதிகள் முன்னேறியிருக்காத காலம் அது.
சிறுவனின் இரு கண்களும் பார்வை இழந்து விட்டன. சிறுவனை பார்வையற்றவருக்கான பள்ளியில் சேர்த்தார் தந்தை. அங்கே பெரிய பெரிய மரக்கட்டைகளில் செதுக்கப்பட்ட எழுத்துகளைத் தடவித் தடவித்தான் பாடம் கற்றுக்கொள்ள இயலும். மிகவும் கஷ்டமான செயல் அது. பார்வை இழந்த சிறுவன் இதற்கு ஒரு எளிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தான். பலவருட முயற்சிகளுக்குப் பிறகு அவனுக்கு வெற்றி கிடைத்தது. இன்று உலகம் முழுவதும் அவன் கண்டுபிடித்த முறையைத்தான் பார்வையற்றவர்கள் உபயோகிக்கிறார்கள். அது, ப்ரெய்ல்முறை. அந்தச் சிறுவனின் பெயர், லூயிஸ் ப்ரெய்ஸ்ல்.
நம்பிக்கையை இழக்காமல், சூழ்நிலையை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. நம்முடைய ஏக்கத்தை, இதய ஆவலை, உள்மனஉணர்வுகளைப் புரிந்துகொள்ளும் இயேசுவின் செவிகளில் நம் கூக்குரல் ஒலிக்கும். நம்முடைய தேவையை இயேசு கிறிஸ்து நிறைவேற்றுவார். ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை நமக்கு வழங்குவார். பகுத்தறியும் தன்மையைப் புகட்டுவார். நாம் கேளாத செல்வத்தையும் புகழையும் நமக்குத் தருவார். நீண்ட ஆயுளையும் நமக்கு அருள்வார். நமக்குப் புதிய வழிகளைத் திறப்பார். புதிய பாதையைக் காட்டுவார். புது வரங்கள், புது வல்லமைகள், புது உற்சாகம் இவற்றின் ஊற்றுக் கண்களைத் திறப்பார். ஏமாற்றம், வருத்தம், சஞ்சலம், மனப்போராட்டம், கவலை இவற்றிலிருந்து விடுதலை கொடுப்பார்.
வளமையில் நம்மைப் படைத்த இறைவனை மறக்காதிருப்போம். ஏனென்றால், வளமையில் நம் நன்றியுணர்வை சோதிப்பார். வறுமையில் நம்மைப் படைத்த இறைவனை மறக்காதிருப்போம். ஏனென்றால், வறுமையில் நம் நேர்மையைச் சோதிப்பார். இருளில் நம் நம்பிக்கையையும், இழப்பில் நம் மகிழ்ச்சியையும், சோதனையில் நம் பற்றுதலையும் சோதிப்பார். எனவே, எந்த நிலையிலும் நம் ஆன்மாவின் அரசராக இறைவனைக் கொண்டிருப்போம். சோதனைகள் வேதனைகள் வரத்தான் செய்யும்; சில காலம் சகித்துக் கொள்வோம். ஆபால் அழுகையின் பள்ளத்தாக்கிலே நாம் அமிழ்ந்து கிடக்க அவர் விடமாட்டார். அமுதான நீரூற்றை நம் மத்தியில் பொங்கச் செய்வார்.
நம் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் எவ்வளவு நேர்மையுள்ளவர் என்றும், அவரிடத்தில் அநீதி இல்லை என்றும் நாம் உணர்வோம். மனிதரின் எண்ணங்களை ஆண்டவர் அறிவார். ஆண்டவர் தம் மக்களைப் புறக்கணிப் பதில்லை. தம் உரிமைப் பொருளானவர்களைக் கைவிடுவதில்லை. நம் இதயத்தில் கவலைகள் மிகும் வேளையில் ஆண்டவர் தரும் ஆறுதல் நம் ஆன்மாவை இன்பத்தில் ஆழ்த்தும். செவியைக் கொடுத்தவர் நம் குறைகளைக் கேளாமலிருப்பாரா? கண்ணை உருவாக்கியவர் நம்மை ஏறெடுத்துப் பாராமலிருப்பாரா? நேர்மையான உள்ளத்தோடு தேடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
“தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும். நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்ல மாட்டார். நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார். செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை. அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான். அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும். கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்” (நீதிமொழிகள் 22:4-9).

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நேர்மை நம்மைக் காக்கும்
» ராகு கவசம்....
» கிரகங்கள் நம்மைக் காப்பாற்றுமா?
» சூரியன் கவசம்
» சுதர்சன கவசம்
» ராகு கவசம்....
» கிரகங்கள் நம்மைக் காப்பாற்றுமா?
» சூரியன் கவசம்
» சுதர்சன கவசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum