சூரியன் கவசம்
Page 1 of 1
சூரியன் கவசம்
திருவளர் தலை புரக்கச் சீர்மலி கிருணி என்றும்
உருமலி நெற்றி காக்க ஓங்கு சூரியன் ஆதித்தன்
குருமலி நயனம் காக்க குழைச் செவி திவாகரன் தான்
மருவினன் காக்க நாசி வளர் ஒளி பானு காக்க
மலர் முகம் இரவி காக்க வளைகடல் உலகுக்கெல்லாம்
பலர் புகழ் விழியோன் நின்றோன் பவளவாய் புரக்கக்
கண்டர் அவர் அறிவரியச் செய்ய கதிர்விபாவசு புரக்க
வலர்கிர சுபகி கந்தம் அகமகிழ்ந்து என்றும் காக்க
அரும் பிரபாகரன் தான் அமர்புயம் இரண்டும் காக்க
தரும்புகழ்க் கையிரண்டும் தழற்கதிர் புரந்து காக்க
வரும் பெரும் பானுமான் என் மனநெறி விழாது காக்க
விரும்பும் ஏழ்பறி உகைப்போன் மேவரு மருங்கில் காக்க
கொடி அணி நெடுந்தேர் ஏறிக் குலம்படு கமல மங்கை
கடிமணஞ் செய்யத் தோன்றும் கதிரவன் திருத்தாள் போற்றி
tamil matrimony_INNER_468x60.gif
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum