தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவண்ணாமலை சிறப்புகள்

Go down

திருவண்ணாமலை சிறப்புகள்  Empty திருவண்ணாமலை சிறப்புகள்

Post  meenu Sat Mar 09, 2013 2:29 pm

சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள்.

கிரிவலத்தின் பலன் திருவண்ணாமலையில் 48 நாட்கள் தங்கி அதிகாலை வேளையில் தம்பதி சமேதராக மலைவலம் வந்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும். அமாவாசை அன்று மலை வலம் வந்தால் எப்பேர்ப்பட்ட கவலையும் நீங்கும்.

திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

2வது பெரிய கோபுரம்

திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்தை திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் அழைக்கிறார்கள்.

அதிசயமலை

மலை என்றால் மரங்களும் புல் பூண்டும் அடர்ந்து கிடக்கும். மிருகங்களும் விஷ ஜந்துக்களும் வாழும். ஆனால் திருவண்ணாமலையில் இப்படி எதுவுமே இல்லை. இம்மலையில் பயன்தரும் மரங்களே உள்ளன. மலையில் நமச்சிவாயர் குகை, விருபாட்சி குகை, பவளகுகை உள்ளிட்ட பத்து குகைகளும் பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, அழுக்குப்பாறை ஆகியவையும் உள்ளன. அல்லிச்சுனை, அரளிச்சுனை, அத்திமரச்சுனை போன்றவை பக்தர் தாகம் தணிக்கக் காத்திருக்கின்றன.

மணிபூரகத்தலம்

ஆறு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை, மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலை பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றை குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டுமொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

மலைக்கோயில்கள்

திருவண்ணாமலையில் குகை நமச்சிவாயர் கோயில், பச்சையப்பன் கோயில், அரவன் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. மலையே கோயிலாகவும் அந்த மலைக்குள்ளும் கோயில்கள் இருப்பது விசேஷமானதுதானே!

சந்திர ஒளி மகிமை

கிரிவலம் செய்யும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் பௌர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார். இந்த ஒளி மனித உடலில் பட்டால் தைரியம் பெருகும். தெய்வபலம் விரைவில் கிட்டும்.

அனைத்தும் 8

எண் கணிதமுறைப்படி 8 என்ற எண்ணை மோசமானதாக சொல்வார்கள். இது தவறான கருத்து என்பதை நிரூபிக்கும் வகையில் அண்ணாமலையின் தோற்றம் அமைந்துள்ளது. இந்தத் தலம் எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றி வரும் போது 8 மைல் கடக்க வேண்டும். மலையைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் 8 லிங்கங்கள் உள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum