நந்தி சிறப்புகள்
Page 1 of 1
நந்தி சிறப்புகள்
சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தி பெருமானை வேண்டிக் கொண்டபின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும்.
இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில்கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர். சிவாலயங்களில் கொடி மரத்திற்குப்பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி.
திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்திஎனப்படுவார்.
இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின்மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.
அவை பத்மநந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும்நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம். சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பார்.
திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ளநந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப்பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அனுமனின் சிறப்புகள்!
» சித்திரை சிறப்புகள்
» சிவராத்திரியின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» ஆடி மாதத்தின் சிறப்புகள்
» சித்திரை சிறப்புகள்
» சிவராத்திரியின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» ஆடி மாதத்தின் சிறப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum