தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவண்ணாமலை சிறப்புகள்

Go down

திருவண்ணாமலை சிறப்புகள் Empty திருவண்ணாமலை சிறப்புகள்

Post  gandhimathi Mon Jan 21, 2013 4:54 pm




* நினைக்க முக்தியருளும் தலம்.

* அருணகிரி நாதரின் வாழ்வில் அருள்திருப்பம் ஏற்படக்காரணமாக இருந்த பதி. * ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

* இத்திருக்கோவிலின் கிழக்குக்கோபுரம் 217 அடி உயரம், தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம்-திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம்- பேய்க்கோபுரம், வடக்கு கோபுரம்-அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

* கிழக்கு கோபுரத்தில் நடனக்கலையும், பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

* கோயிலுனுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலதுப்புறம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி-ரமணர் தவம் செய்த இடம் தரிசிக்கத்தக்கது.

* உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சன்னதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன. திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சன்னதி.

* வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சாத்திய வேல் இன்றுமுள்ளது.

* சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது.

* அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுகள் உள்ளன.

* விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

* மூவர்-அருணாசலப்பெருமான், தங்கக்கவச நாகா பரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

* 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது,

* தலபுராணம் -அருணாசலபுராணம் அருணைக்கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

* அண்ணாமலைவெண்பா குருநமச்சிவாயர் பாடியது.

* குருநாமசிவாயர்,குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்யஞானதேசிகர், தெய்வ சிகாமணி தேசிகர், முதலியோர் இப்பகுதியில் வாழ்ந்த அருளாளர்கள். இவர்களுள் பெரும் யோகியாக திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் எனபர் ராமேஸ்வரத்துக்கு யாத்திரையாக சென்ற போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோவில்களின் நிர்வாகத்தை தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர்ஆதீனத்தையும் ஏற்படுத்தினார். அதுவே குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.

* நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ், சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum