தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்படித் தான் வாழவேண்டும்

Go down

இப்படித் தான் வாழவேண்டும் Empty இப்படித் தான் வாழவேண்டும்

Post  meenu Sat Mar 09, 2013 2:22 pm

இந்த வார பிரார்த்தனை என் இறைவனே, எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!

(திருக்குர்ஆன் 20: 114)
‘இனியும் கொடுமைகளைச் சகிக்க முடியாது’ எனும் நிலையில் முஸ்லிம்களில் சிலர் ஜாபர் எனும் நபித்தோழரின் தலைமையில் மக்கா நகரைத் துறந்து அபிசீனியா (இன்றைய எத்தியோப்பியா) நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அந்நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ஜாபரை அழைத்து இறைத்தூதர் பற்றியும் அவர் செய்துவரும் பணிகள் குறித்தும் விசாரித்தார். அப்பொழுது மன்னரின் அவையில் ஜாபர் நிகழ்த்திய ஒரு சிற்றுரை நபிகளார் எத்தகையப் புரட்சியை ஏற்படுத்தினார் என்பதை அழகாக உணர்த்துகிறது. ஜாபர் கூறினார்:

‘‘மன்னர் பெருமானே, அரபு சமூகம் அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடந்தது. நாங்கள் இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தோம். செத்த விலங்கு முதலியவற்றை உண்ணும் சிறுமையினராய் இருந்தோம். அறிவற்ற செயல்கள் அனைத்தையும் செய்துவந்தோம். உறவு முறைகளையும் ரத்த பந்தங்களையும் உதறித்தள்ளி, உறவுகளை முறித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்குள் இருந்த பலசாலிகள் பலவீனர்களுக்குக் கொடுமைகள் இழைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘இத்தகைய இழிநிலையில் இருந்த எங்களிடையே இறைவன் தன் தூதரை அனுப்பினான். அந்தத் தூதரின் பரம்பரையை நாங்கள் அறிந்திருந்தோம். அவருடைய உண்மையையும் உறுதியையும் உணர்ந்திருந்தோம். அந்தத் தூதர் இறைவனின் பக்கம் எங்களை அழைத்தார். இறைவன் ஒருவனே; அவனுக்கே பணிய வேண்டும்; அவனையே அழைக்க வேண்டும்; உருவ வழிபாடுகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் உண்மையையே பேச வேண்டும்; நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்களை (அமானிதம்) பாதுகாக்க வேண்டும்; உறவு முறைகளையும் ரத்த பந்தங்களையும் உவப்புடன் பேண வேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தடுக்கப்பட்ட ஹராமான செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்; கொலைப்பாதகம் முதலிய கொடுமைகளையும் செய்யக் கூடாதென அண்ணலார் ஆணையிட்டார்கள்.

‘‘நாணமற்ற செயல்கள், பொய்யுரைத்தல், அநாதைகளின் சொத்துகளை அபகரித்தல், கற்புள்ள பெண்கள்மீது வீண் பழி சுமத்துதல் போன்ற பொல்லாச் செயல்கள் அனைத்தையும் புனித நபி அவர்கள் தடுத்தார்கள். இறைவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றும் தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் போன்ற உயர் வழிபாடுகளையும் போதித்தார்கள்.’’

நபித்தோழர் ஜாபர் பேசப் பேச மன்னர் நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அறியாமையிலும் மூடத்தனத்திலும் மூழ்கியிருந்த ஒரு சமுதாயத்தில் அண்ணல் நபிகளார் ஏற்படுத்திய அறிவுப் புரட்சியை, ஆன்மிகப் புரட்சியை எண்ணி எண்ணி மன்னர் மெய்சிலிர்த்தார். பின்னாளில் இந்த மன்னரும் அண்ணலாரின் வழிமுறையை ஏற்றுக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லோரும் வாழவேண்டும்
»  நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் சிவசொரூபம்
» நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் சிவசொரூபம்
» என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?
» என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum