தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்திரமௌலி - இதுதாண்டா விளம்பரம்

Go down

சந்திரமௌலி - இதுதாண்டா விளம்பரம் Empty சந்திரமௌலி - இதுதாண்டா விளம்பரம்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:21 pm


பழைய ஜாக்கிசான் படங்களை அவரின் புதிய புகைப்படத்தைப் போட்டு புத்தம் புதிய படம்போல் தொண்ணூறுகளில் வெளியிட்டு வந்தார்கள். இந்த டெக்னிக்கை தமிழ்ப் படங்களுக்கு பயன்படுத்தினாலும் ரசிகர்கள் ஏமாறவில்லை. இந்த ஏமாற்று யுக்தி இப்போது பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. எப்படி?

மாவீரன், நான் ஈ படங்களை தந்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் சந்திரமௌலி படம் இனிதே தொடக்கம் என்று சென்னை மாநர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆர்ட்டிஸ்ட் பெயர் இல்லாமல் டெக்னிஷியன் பெயருடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அடுத்தப் படம் பற்றி யோசிக்கப் போவதில்லை என்று ராஜமௌலிகாரு சொல்லி ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் டெக்னிஷியனை முடிவு செய்து படத்தையும் ஆரம்பித்துவிட்டாரா? என்னடா ஒரே ஜீபூம்பாவாக இருக்கு?

விஷயம் இதுதான். 2005ல் சந்திரமௌலி பிரபாஸை வைத்து சத்ரபதி என்ற படத்தை எடுத்தார். அதனை சந்திரமௌலி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நான் ஈ தந்த பிரமாண்ட விளம்பரத்தால் ராஜமௌலிக்கு தமிழிலும் ரசிகர்கள் பெருகியுள்ளனர். அதனை அறுவடை செய்ய ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்தப் படத்தை, இப்போதான் ஆரம்பிக்கிறோம் என்று தெனாவெட்டுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

பப்ளிக்காக செய்யும் இந்த ஃபிராடுகளை அரசு தட்டிக் கேட்குமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum