தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாநிலம் போற்றும் மஹா சிவராத்திரி

Go down

மாநிலம் போற்றும் மஹா சிவராத்திரி Empty மாநிலம் போற்றும் மஹா சிவராத்திரி

Post  meenu Sat Mar 09, 2013 1:27 pm

மங்கையர்க்கு ஒன்பது இரவு நவராத்திரி; ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி என்பார்கள். புண்ணியம் மிக்க சிவராத்திரியைப் பற்றி நான்முகனாகிய பிரம்மன் இவ்வாறு உரைக்கிறார்:

“அரியும் யானும் முன்தேடும்
அவ்அனல்
கிரியெனும்படி நின்றதால்
அவ்வொளி கிளர்ந்த
இரவதே சிவராத்திரி யாயின
திறைவள்
பரவி உய்ந்தனர் அன்னதோர்
வைகலில் பலரும்’’
இந்தப் பாடல், கந்த புராணத்தில் தட்ச காண்டத்தில் வருகிறது.

இதன்மூலம், தானும், திருமாலும் சிவபெருமானின் திருமுடி மற்றும் திருவடியைக் காணச் சென்ற தங்களது முயற்சி சம்பவத்தை அவர் விவரிக்கிறார். இதன்படி, சிவபெருமான் எடுத்த அருவுருவமான வடிவமே லிங்கம் ஆகும். இதனை லிங்கோத்பவர் எனப்போற்றுவர். சிவத்தலங்களில், இறைவன் திருமூலட்டானத்திற்கு மேற்கு புறத்தில் இத்திருமேனி எழுந்தருளும். இவ்வாறு சிவபெருமான் லிங்கோத்பவர் ஆக அவதாரம் எடுத்த நாள் மஹா சிவராத்திரி நாள் என்று மேற்கூறிய பாடல் உணர்த்துகிறது.

“சிவராத்திரி போது துயிலோம்
என்ற விரதியரும்
அரிதுயில் போலேயிருந்தும் துயில்வார்” என்று தாயுமானவர் தம் பரிபூரணாந்தம் மூலம் சிவராத்திரி அன்று நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விரத சம்பிரதாயத்தை மிகச் சுருக்கமாகக் கூறுகிறார். சிவ ராத்திரி புராணம், பிரமோத்தர காண்டம் மற்றும் உபதேச காண்டம் ஆகிய நூல்களின் மூலமாகவும் இதை அறியலாம்.

சிவராத்திரி வகைகள்

1. நித்திய சிவராத்திரி சதுர்த்தசி திதி தோறும் வருவது. இதன்படி ஓர் ஆண்டிற்கு 24 நித்திய சிவராத்திரிகள்.
2. பட்ச சிவராத்திரி தை மாதம் தேய்பிறை பிரதமை திதி முதல் திரயோதசி முடிய 13 நாட்களும், 14ம் நாளான சதுர்த்தசி அன்றும் வருவது.
3. மாத சிவராத்திரி மாதந்தோறும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது.
4. யோக சிவராத்திரி சோம வாரத்தில் (திங்கள் கிழமை) முழு நாளும் அமாவாசை திதி நிறைந்த நாள் அன்று வருவது.
5. மஹா சிவராத்திரி மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது. இது வருஷ சிவராத்திரி எனவும் சிறப்பிக்கப் பெறுகிறது.


சிவராத்திரி நாள் பற்றிய புராணக் கருத்துகள்

உமாதேவியார் சிவபெருமானின் கண்களைப் பொத்தி விளையாட, உலகமே இருண்டுவிட்டது. உயிர்கள் யாவும் அகம், புறம் ஆகிய இருவகை இருளிலும் மூழ்கித் தவித்தன. தம் விளையாட்டு வினையாகிவிட்ட நிலைக்குத் தாமே பொறுப்பேற்று, மீண்டும் பழைய நிலைக்கு உலகை நிலை நிறுத்த உறுதி பூண்டாள், அன்னை. அதற்கு இறைவனின் திருவுளம் இரங்க வேண்டி, உமையவள் அன்றிரவு முழுவதும் கண் விழித்து 4 கால சிவ பூஜை புரிந்தாள். அப்பூஜைக்குப் பலனாய் உலகை இருட்டிலிருந்து தம் அருட்பார்வையால் மீட்டார், ஈசன். இப்புண்ணிய சம்பவம் நிகழ்ந்தது, மஹா சிவராத்திரி நாளாகும்.

சிவராத்திரி அன்று சிவபெருமானை அறிந்தோ அறியாமலோ பூஜித்தாலும் மிகுந்த பலன் உண்டு என்பதை பின்வரும் கதை உறுதி செய்யும்.

வேடன் ஒருவன் மிகுந்த பசியுடன் காட்டில் வேட்டையாட வந்தபொழுது, புலி ஒன்று துரத்த, தன் உயிரைக் காத்துக் கொள்ள, மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்தான். அது வில்வ மரமாகும். பருகுவதற்கு குடுவை ஒன்றில் நீரும் வைத்திருந்தான். அவனது அசைவின் போதெல்லாம் குடுவை நீரும் வில்வ இலைகளும் கீழிருந்த லிங்கத்தின் மேல் விழுந்தன. இந்நிலை இரவு முதல், மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. இது மஹா சிவராத்திரி புண்ணிய காலம் என வேடன் அறியாமலிருந்தான். ஆனாலும், அறியாமலேயே தம்மைப் பூஜித்த வேடனுக்கு இறைவன் அருள்புரிய திருவுளம் கொண்டார். அவனுக்குத் தம் திருக்காட்சியை காட்டி அருளினார். வேடனும் பயபக்தியுடன் பணிந்து, ‘‘நான் கொலை தொழில் புரிபவன்.

கொடியவன். என்னையும் ஆட்கொள்வீர்களா?’’ என வினவ, ஐயன், ‘‘இப்புனித நாளில் என்னை நீர் கொண்டு திருமஞ்சனம் செய்வித்து, வில்வம் கொண்டு அர்ச்சித்து பூஜித்ததின் பலனாய் அடுத்த பிறவியில் நீ படகோட்டியாய் பிறப்பாய். அதுசமயம் திருமாலின் அவதாரமாகிய ராமரை கங்கையாற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு உன் படகு சுமக்க, நீ படகோட்டிச் செல்லும் பேறு பெறுவாய்’’ என திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி வேடனும் குகனாய் பிறந்து ராமபிரானால் “குகனொடும் ஐவரானோம்’’ எனச் சிறப்பிக்கப் பெறுகிறான்.

“திரிதளம் திரிகுணாதாரம்
த்ரே நேத்ரவம்ச த்ரியாயுஷம்
த்ரி ஜன்ம பாப சம்ஹாரம்
ஏக வில்வம் சமர்ப்பணம்’’

எனும் இச்சுலோகம் மூலம் தம்மை ஒரு வில்வ இலை கொண்டு பூஜிப்பவருக்கே “வேண்டியவை வேண்டியாங்கு” ஈயும் ஈசன், வேடனுக்கு தம் பேரருளை அளித்த சிவனின் கருணையை அறியலாம்.

ஆகாய கங்கையாக இருந்த நதியை மண்ணிற்குக் கொண்டுவர பகீரதன் செய்த தவத்தினை புராணங்கள் நமக்கு உணர்த்தும். ஆனால், ஆகாய கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதை அறிந்த சிவபெருமான் தம்முடி மீது தாங்கினார். பிறகு ஆத்மலிங்கம் எனும் லிங்கத்தை உருவாக்கி அதன் மீது கங்கையை செலுத்தி, பிறகு பூமியில் ஓடச் செய்தார். இதன்மூலம் ஆத்மலிங்கம் உருவான காலம் பிரணவ மஹா சிவராத்திரி புனித நாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.

திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் ஆலகால விஷம் தோன்றியது. அதன் நச்சுத் தன்மையின் வெப்பம் தாளாமல் தேவர்கள் மூர்ச்சையுற்றனர். உடன் சிவன் அந்நஞ்சை உண்டு, ‘நீலகண்டன்’ ஆனார். இதனால் “நீல மணிமிடற்றுப் பெரியோன்” என இலக்கியங்கள் ஏத்தும். இவ்வாறு தம் குலத்தைக் காத்த இறைவனுக்கு தேவர்களால் சிறப்பாக பூஜிக்கப் பெறும் நாள் பிரதோஷம் ஆகும். மறுநாள் மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி. சிவராத்திரியன்றும் 4 யாமங்களிலும் (இரவு 10 மணி முதல் மறுநாள் விடிய காலை 6 மணி முடிய) தொடர் பூஜை நிகழ்த்தி அனைவரும் சிவப்பேறு பெற்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum