தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை

Go down

பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை Empty பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை

Post  ishwarya Sat Mar 09, 2013 12:36 pm


தமிழகத்தின் நிதி வருவாயின் முதுகெலும்பாக இருப்பது டாஸ்மாக் எனப்படும் மதுபானக்கடைகளே. இந்தக் கடைகள் இல்லாத வார்ட் தமிழகத்தில் இல்லை. ஆனால் இதை ஒரு படத்தின் தலைப்பாக்கியதற்காக அந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர் பிரச்சனைகளின் எல்லைக்கே துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்.

கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் மதுபானக்கடை நேற்று வெளியானது. அதற்கு முன்பே இப்படம் சென்சார் ரூபத்தில் பிரச்சனையை சந்தித்தது. படத்தில் ஆபாச, வன்முறை, பிற்போக்கு காட்சிகள் இல்லை. ஆனாலும் படத்தை வெளியிடக் கூடாது என்று அடம் பிடித்தது சென்சார். காரணம் படம் நெடுகிலும் வரும் மதுபானக்கடை காட்சிகள். நாட்டில் தெருவுக்கு தெரு அனுமதிக்கப்பட்ட மதுபானக்கடையை படத்தில் மட்டும் காண்பிக்கக் கூடாதா என்று வாதிட்டப் பிறகு ஏ சான்றிதழுடன் படத்தை அனுமதித்தனர்.

ஏ சான்றிதழ் காரணமாக படத்தை எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப முடியாது. எனவே அந்த வருவாய் தயா‌ரிப்பாளருக்கு இல்லை. படத்தை வெளியிடுவதிலும் ஏக சிக்கல். மதுபானக்கடை என்று பெயர் இருப்பதால் சத்யம், எஸ்கேப் போன்ற மல்டிபிளிக்ஸ்கள் படத்தை திரையிட மறுத்துவிட்டன. ஹேங்ஓவர் படத்தை போட்டிப் போட்டு ஓட்டியவர்கள் இந்த கனவான்கள் என்பது தனியே குறிப்பிட வேண்டிய ஒன்று. பிவிஆர், ஏ‌ஜிஎஸ் போன்றவை படத்தை திரையிட்டுள்ளன. இத்துடன் நிற்கவில்லை.

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் கூட்டம் இருந்தும் படத்தை ஒரே நாளில் தூக்கிவிட்டனர். அதேபோல் பல திரையரங்குகளில் ஒரே நாளில் காட்சிகளின் எண்ணிக்கையை பட்டென்று குறைத்து வேறு படாவதி படத்தை திரையிட்டுள்ளனர். இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று யாருக்கும் தெ‌ரியவில்லை. வருடத்துக்கு பதினெட்டாயிரம் கோடிக்கு மேல் மதுபானக்கடையினால் வருமானம் பெறும் ஒரு மாநிலத்தில் மதுபானக்கடை பெய‌ரில் படம் எடுக்க முடியவில்லை. கலாச்சாரம் கெட்டுடுமாம். இதென்னய்யா லா‌ஜிக்?

ச‌ரி, படம் எப்படி? கொடுக்கிற காசுக்கு குறைவில்லாத சரக்கு இந்த மதுபானக்கடை என்கிறார்கள் பார்த்தவர்கள் அனைவரும். நீங்களும் பாருங்களேன்.
மதுபானக்கடை சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum