தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!

Go down

அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்! Empty அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!

Post  meenu Sat Mar 09, 2013 1:20 pm

இந்தக் குர்ஆனில் பலவிதமான உவமைகளின் மூலம் மக்களுக்கு (உண்மைகளை) விவரித்துள்ளோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பிலேயே விடாப்பிடியாய் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நீர் பூமியைப் பிளந்து எங்களுக்காக ஒரு நீரூற்றை ஓடச் செய்யாதவரை அல்லது பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதன் நடுவே ஆறுகளை நீர் ஓடச் செய்யாதவரை நாங்கள் உமது பேச்சை நம்ப மாட்டோம். அல்லது நீர் வாதிடுவதுபோல் வானத்தை துண்டு துண்டாக்கி எங்கள் மீது போடாதவரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரடியாக எங்கள் முன் கொண்டு வராத வரை உம்மை நாங்கள் நம்ப மாட்டோம். அல்லது தங்க மாளிகை ஒன்று உமக்காக உருவாகாத வரை அல்லது வானத்தில் நீர் ஏறிச் செல்லாதவரை - நீர் வானத்தில் ஏறினாலும்கூட நாங்கள் படிப்பதற்கு ஒரு நூலை எங்கள் மீது இறக்கித் தராத வரை உம்மை நம்ப மாட்டோம்.’’ - (நபியே! இவர்களிடம்) கூறுவீராக: ‘‘தூய்மையானவனாக இருக்கிறான், என்னைப் பரிபாலிப்பவன்! நான் தூதுச் செய்தியைக் கொண்டு வருகின்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லையே!’’மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம் அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, ‘‘அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?’’ என்று அவர்கள் கேட்டதுதான். அவர்களிடம் கூறும்: ‘‘பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!’’ (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்: ‘‘எனக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான்.’’
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
» யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தர எமது அரசு தயார்-மஹிந்த ராஜபக்ஷ
» அவன் அவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum