ஆன்மிக அலமாரி
Page 1 of 1
ஆன்மிக அலமாரி
இங்கே விமர்சனத்துக்கு பெறப்படும் புத்தகங்களிலிருந்து ஒரு பகுதி.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக...
திருவிளக்கில் சிவ குடும்பம்
ஜோதி சிவபெருமான் (திருவண்ணாமலை), சூடு பராசக்தி, செந்நிறம் சிந்தூர கணபதி, சிவன் நெற்றிக்கண் ஒளியில் உண்டான முருகப் பெருமான், சுடரே சூரிய நாராயணன் என தீபத்தில் சகல தெய்வங்களும் உள்ளனர்.
‘‘சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை - படர் ஒளியோ
கந்தவேள் ஆகும் கருத்துங்கால்
சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு.”
-சிவ குடும்பத்தையே ஒரு திருவிளக்கில் காணச் செய்கிறது இந்த வெண்பா. விளக்கு உடம்பு, எண்ணெய் ரத்தம், திரிசக்தி இவை எரிவதால் வெளிப்படும் ஒளி ஆன்மா. ஐந்து முகங்களும் பெண்களுக்கு தேவையான அன்பு, அறிவு, மனஉறுதி, பொறுமை அல்லது நிதானம், சமயோசித புத்தியாகும். இருளைப் போக்க ஒளியேற்றுவதோடு, மன இருளை அகற்ற உள் ஒளியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. இந்து சமயத்தில் விளக்கேற்றுவது புது வழிபாடு இல்லை. நல்ல காரியமானாலும் அல்லாத காரியமானாலும் (மோக்ஷ தீபம்) திருவிளக்கு ஏற்ற வேண்டும் என்ற நியதி ஏற்படுத்தப்பெற்றுள்ளது.
(ஆன்மீக உண்மைகளும் அறிவியல் விளக்கங்களும். யோகிநி நிர்மலாம்பா சரஸ்வதி, பக்: 144 ரூ. 70/-, ஸ்ரீஆரோமிரா பிரசுரம், 1, ஏரப்பக் கவுண்டர் சந்து, நடுவீதி, தம்மம்பட்டி - 636 113. செல்: 9943277955, 9486498452.)
முதல் சீடர்
சுவாமி விவேகானந்தர் ஒருசமயம் களைப்பு தீருவதற்காக ரயில் நிலைய மரத்தடி ஒன்றில் அமர்ந்திருந்தார். அந்தப் பக்கமாக வந்த சரத்பாபு என்ற ரயில் நிலைய அதிகாரி, அவரை வணங்கி தம் இல்லத்துக்கு வந்து பிட்சையேற்றுப் போக வேண்டுமென்று வேண்டினார். பக்தர் சரத்பாபுவின் வீட்டில், இரண்டு நாள் தங்கி விட்டு மூன்றாம் நாள் கிளம்பிய விவேகானந்தரிடம், ‘‘சுவாமி நானும் உங்களுடன் வந்து விடுகிறேன். எனக்கு தீட்சை செய்து வையுங்கள்’’ என்று பணிவுடன் கேட்டார், சரத்.
‘‘துறவறம் சிரமமானது; அவசரப்படாதே; உனக்குப் பக்குவம் போதாது’’ என்று சுவாமி மறுத்தார். சரத்பாபு வற்புறுத்தவே, தமது கையிலிருந்த கப்பறையை சரத்பாபுவிடம் கொடுத்து, ‘‘ஸ்டேஷன் கூலிகளிடம் பிட்சை அரிசி வாங்கி வா’’ என்றார்.
சரத்பாபு அவ்வண்ணமே செய்து குருநாதரிடம் கொண்டு வந்து தந்தார். விவேகானந்தர் அவரை கட்டித் தழுவி சீடராக ஏற்றுக்கொண்டார்; சதானந்தன் என்ற பெயரையும் சூட்டினார். இவர்தான் விவேகானந்தரின் முதல் சீடர்.
(பக்திக் கதைகள், சக்தி.விண்மணி, பக்: 160
ரூ.60/-, தென்றல் நிலையம்,
12 பி, மேலசன்னதி, சிதம்பரம்-608001. தொலைபேசி: 04144-230069)
லிங்கத்தின் மத்தியில் தங்கக்கோடு
ஆதிசங்கரர் நிறுவிய அன்னையின் அந்தத் தோற்றம்தான் கொல்லூரில் கடந்த பல நூற்றாண்டுகளாக பக்தர்களுக்கு தரிசனத்தையும் அருளையும் தந்து கொண்டிருக்கிறது. ஐம்பொன்னாலான அன்னை மூகாம்பிகா நான்கு கரங்களுடைய தேவியாக அமர்ந்திருக்கிறார். இரண்டு கைகளில் சங்கு சக்கரம்; ஒரு கை அபயக்கரம்; சரணடையத் தூண்டும் கையுடன் உலகைப் பரிபாலனம் செய்கிறாள். விக்ரகத்துக்கு சற்று முன்னால் சுயம்புவாகத் தோன்றிய ஜோதிர்லிங்கம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் ஒரு தங்கக்கோடு! இடதுபுறம் அதிகமாகவும் வலதுபுறம் குறைவான பாகமாக விளங்குகிறது.
இந்த லிங்கத்தின் வலது பக்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும்! இடது பக்கத்தில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய தேவியர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள் என்பது ஐதீகம். இந்தச் சுயம்புலிங்கம் எத்தனை ஆழமாக சென்றுள்ளது என்பதோ தேவ ரகசியம்! இந்து மதத்தைப் புனரமைத்து, ஆறு சமயமாகப் பகுத்துப் பிரித்து வழிமுறைகள் வகுத்து, பாரத பூமியெங்கும் நடந்தே சென்று இந்து தர்மத்தைப் போதித்தவருமான ஆதிசங்கரர், தான் பிரதிஷ்டை செய்த மூகாம்பிகா ரூபத்தின் முன்னால் அமர்ந்து அன்னையின் அருள் வெள்ளத்திலும் அழகிலும் மெய் மறந்து துதித்தார்.
அவர் முன் அன்னை அம்பிகா அழகிய தோற்றமும் எழிலும் கொண்டு தன் அடியாரான ஆதிசங்கரரைப் பார்க்கிறாள். அவருக்கு அன்னையின் அன்பும் அழகும் ததும்பும் உருவம் பல கற்பனைகளை உருவாக்குகிறது. கவிதாப்பிரவாகம் பொங்குகிறது. கடல் மடையெனத் திறக்கிறது. வார்த்தைகள் மலர்களாவும் அதன் பொருள் ரத்தினங்களாகவும் வந்து விளையாடுகின்றன. அழகே! அருளே! அன்பே! என அழைக்கிறார். அதன் முதல் பாடலிலேயே ஐந்து சமயங்களையும் மறக்கிறார். ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, சிவனும் மறைகிறார்கள். சாக்த வழிபாடான சக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியுமான மூகாம்பிகா ஆதிபராசக்தியாக நிற்கிறாள். அவள் ஒருவளே எங்கும் நிறைந்த பரம்பொருளாக தோன்றுகிறாள்.
(கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை வரலாறு. சக்தி.கே.கிருஷ்ணமூர்த்தி,
பக்: 54, ரூ. 30/-, பத்ம சக்தி நிறுவனம், 21, (பி131) 10வது தெரு, பெரியார் நகர், சென்னை - 600082. தொலைபேசி: 2550 0137)
கோயில் திருஅகவல்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம்; புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்.
*********
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கு இடம்; ஓடும் மரக்கலம்;
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனவில் இடுசில விருந்து
காமக் கனவில் கருகும் சருகு.
இமையா நாட்டத்து இறையே அடைக்கலம்;
அடியார்க்கு எளியாய் அடைக்கலம் அடைக்கலம்
(பட்டினத்தார் பாடல்கள், கவிஞர் அரு.சோமசுந்தரன், பக்: 32, ரூ. 10/- மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108. தொலைபேசி: 044-25361039)

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீடியோ அலமாரி
» வானம் என் அலமாரி
» ஆடியோ - வீடியோ அலமாரி
» 205 வகையான வீட்டு ÷ஷாகேஸ் அலமாரி மாதிரிகள்
» ஆன்மிக அறிவியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum