தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜா, வைரமுத்துவின் இளைய கூட்டணி

Go down

இளையராஜா, வைரமுத்துவின் இளைய கூட்டணி Empty இளையராஜா, வைரமுத்துவின் இளைய கூட்டணி

Post  ishwarya Sat Mar 09, 2013 12:09 pm


இளையராஜா, வைரமுத்து இணைவதற்கான அறிகுறி தொலைவிலும் தென்படவில்லை. பலமுறை வைரமுத்து பக்கமிருந்து நீண்ட சமாதான கைகுலுக்கலை இளையராஜா நிர்தாட்சண்யமாக மறுத்திருக்கிறார். இளையராஜாவைப் போல் அவரது வா‌ரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதா‌ரிணி ஆகியோரும் வைரமுத்து எனும் கவியின் பக்கம் தலைவைத்ததில்லை.

நல்லவேளையாக இந்தப் பகை அடுத்த தலைமுறையை பாதிக்கவில்லை. வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாட்ல் எழுதியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. மூத்த மகன் மதன் கார்க்கி முன்னணி இயக்குனர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்கள், வசனம் என்று எழுதி குவிக்கிறார். போட்டியாக கபிலனும் களம் கண்டிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌‌ஜீத் நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை கபிலன் எழுதியிருக்கிறாராம். இந்த சமரசம் சிறுகதையாக இல்லாமல் கன்னித்தீவாக தொடரட்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum