தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்பு பிரச்சனையில் தாண்டவம், சமர்

Go down

தலைப்பு பிரச்சனையில் தாண்டவம், சமர் Empty தலைப்பு பிரச்சனையில் தாண்டவம், சமர்

Post  ishwarya Sat Mar 09, 2013 11:32 am

வேறு எந்த காலகட்டத்திலும் முன்னணி நடிகர்களின் படத்தலைப்புகள் இந்தளவு பிரச்சனையில் மாட்டியதில்லை. விஜய்யின் துப்பாக்கி, விக்ரமின் தாண்டவத்தைத் தொடர்ந்து விஷாலின் சமர் தலைப்புக்கும் தடை கோரப்பட்டுள்ளது.

துப்பாக்கி படத்திற்கு அந்த தலைப்பை பயன்படுத்தலாமா கூடாதா என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் படத்திற்கான விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளனர். தாண்டவம் படத்திற்கும் தடை கோரப்பட்டு பதில் மனு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சமர் படமும் சிக்கலை சந்தித்துள்ளது.

இதே பெய‌ரில் ஒரு படம் தமிழில் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை விஜய் என்பவர் தயா‌ரித்து வருகிறார். நாங்கள்தான் சமர் டைட்டிலை முதலில் பதிவு செய்தோம், அதனால் விஷாலின் சமருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடுத்துள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படப்பெயர்கள் பிரச்சனையில் மாட்டியிருப்பது இதுவே முதல்முறை. மேலும், விஷால் படத்துக்கு முதலில் சமரன் என்று பெயர் வைத்து, அந்தப் பெயர் ஏற்கனவே சேம்ப‌ரில் பதிவு செய்திருந்ததால் சமர் என்று பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum