தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.எல்.விஜய் தயா‌ரிப்பில் அஜயன்பாலா

Go down

ஏ.எல்.விஜய் தயா‌ரிப்பில் அஜயன்பாலா Empty ஏ.எல்.விஜய் தயா‌ரிப்பில் அஜயன்பாலா

Post  ishwarya Fri Mar 08, 2013 2:19 pm

இப்படியொரு இனிய விபத்து எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று திரையுலக நண்பர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். விபத்து கொஞ்சம் தாமதமாக நடந்திருக்கிறது என்பது நமது எண்ணம்.

விஜய் இயக்கிய மதராசப்பட்டணம், தெய்வத்திருமகள், விரைவில் வரவிருக்கும் தாண்டவம் முதலான படங்களின் கதை விவாதத்தில் பிரதானமாக இடம்பெற்றவர் எழுத்தாளர் அஜயன்பாலா. மேலே உள்ள படங்களின் மூலத்தை கண்டடைந்து அதனை மேலே உள்ள படமாக மாற்றியதில் இவரது எழுத்தாற்றலும், கற்பனா சக்தியும் பெருமளவு பங்காற்றியிருக்கிறது. அதற்கு கைமாறாக விஜய் தயா‌ரிக்கும் படத்தை அஜயன்பாலா இயக்குகிறார் என்று பிறர் சொல்கிறார்கள்.

அஜயன்பாலா சித்திரம் பேசுதடியில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் தலைகாட்டி ஒன்றிரண்டு வசனங்கள் பேசியிருக்கிறார். பல சினிமா சம்பந்தமான நூல்கள் எழுதியிருக்கிறார். சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். நடிகர் மார்லன் பிராண்டோவின் சுயச‌ரிதையை தன்விருப்பப் பாணியில் மொழிபெயர்த்துள்ளார்.

எந்த வகையில் பார்த்தாலும் ஒரு எழுத்தாளர், இலக்கியவாதி சினிமாவுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். அஜயன்பாலா தமிழ் சினிமாவுக்கு ஆக்சிஜன் தராவிட்டாலும் குறைந்தபட்சம் குளுக்கோசாவது தருவார் என நம்புவோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum