தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவமனையில் திலகன், மனோரமா

Go down

மருத்துவமனையில் திலகன், மனோரமா  Empty மருத்துவமனையில் திலகன், மனோரமா

Post  ishwarya Fri Mar 08, 2013 1:55 pm


தென்னிந்தியாவின் சிறந்த இரு நட்சத்திரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திலகன், மனோரமா.

இதில் திலகனின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக திருவனந்தபுரத்தில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திலகன் சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வருகிறார். மலையாள நடிகர் சங்கமான அம்மா அவரை ஒதுக்கி வைத்தது மனோரீதியாக கடும் பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் ரெஞ்சித் தனது இந்தியன் ருப்பீ, ஸ்பிக்ப்ட் படங்களில் திலகனை நடிக்க வைத்தார். இது திலகனின் மனக்குறையை சிறிது தணித்தது எனலாம்.

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிட்சை பெற்று வருகிறக்ர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

மனோரமாவும் பல்வேறு உடல்நலக்குறைவால் கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். தற்போதுதான் அவர் குணமடைந்து சிங்கம் 2 வில் நடிக்கும் அளவுக்கு தேறினார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிட்சை எடுத்து வரும் இருவருமே மிகச் சிறந்த கலைஞர்கள். இருவரும் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum