மீண்டும் மலையாளத்தில் நயன்தாரா
Page 1 of 1
மீண்டும் மலையாளத்தில் நயன்தாரா
கேரளாவில் இருந்து வந்து தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான பிறகு மலையாள சினிமாவை நடிகைகள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. நயன்தாரா, அசின் இதற்கு சரியான உதாரணம். பீக்கில் இருந்த போது மலையாள சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா பாடிகாட் படத்தில் மட்டும் போனால் போகிறது என்று நடித்தார். அசின் அதுவும் இல்லை.
பிரபுதேவாவுடனான காதல் முறிந்த பிறகு நயன்தாராவிடம் நிறைய மாற்றங்கள். அதில் ஒன்று தாய்மொழி பாசம். நல்ல கேரக்டர் அமைந்தால் மலையாளத்தில் நடிப்பதென முடிவு எடுத்திருக்கிறார்.
மம்முட்டி, பிருத்விராஜ் இணைந்து சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கிறார்கள். கம்யூனிசப் பின்னணியில் இதுபோன்ற படங்கள் அடிக்கடி கேரளாவில் எடுக்கப்படுவதுண்டு. லால் சலாம், ரத்தசாட்சிகள் சிந்தாபாத் போன்றவை உதாரணங்கள். இந்தப் படத்தில் வித்யாபாலன் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. இப்போது அந்த இடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பவர் நயன்தாரா. அவரும் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக தகவல்.
மம்முட்டி, பிருத்விராஜ் இணைந்து நடித்த போக்கிரிராஜா என்ற படம் கொஞ்ச நாள் முன்பு வெளியானது. படம் இண்டர்நேஷனல் பிளாப் என்பதை இத்துடன் சேர்த்து வாசிக்கவும்.
மலையாளம் நயன்தாரா
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாளத்தில் மீண்டும் ஷகிலா, ஆனால்...
» மீண்டும் வருகிறார் நயன்தாரா?
» மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா
» அஜீத்துடன் மீண்டும் நயன்தாரா ஜோடி
» மீண்டும் ஜோடி சேரும் ஆர்யா, நயன்தாரா
» மீண்டும் வருகிறார் நயன்தாரா?
» மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா
» அஜீத்துடன் மீண்டும் நயன்தாரா ஜோடி
» மீண்டும் ஜோடி சேரும் ஆர்யா, நயன்தாரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum