கைலாசநாதர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Page 1 of 1

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஆனந்த தாண்டவபுரம் செல்லும் வழியில் இருக்கிறது கழுக்காணிமுட்டம். இது சப்த மாதர்களுள் ஒருவரான வாராஹி வழிபட்ட தலம். சிவபெருமான், சீலவதியின் பக்தியை உலகிற்கு உணர்த்திய தலம். சிவபக்தியில் சிறந்து விளங்கிய சீலவவதி அம்மையார், அடியார்களுக்கு உணவு படைத்த பிறகே தானும் தன் மகனும் சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் சிவபெருமானும் சிறுதொண்டரும் அடியார் ரூபத்தில் சீலவதி இல்லத்துக்கு வந்தார்கள். அடியார் இருவரையும் எதிரே உள்ள திருக்குளத்தில் நீராடி வரும்படியும் அவர்கள் வருவதற்குள் அறுசுவை உணவைத் தயாரித்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரது ஒரே மகனோ, பசி தாங்காமல் உணவை உட்கொள்ள, அதைப் பார்த்த சீலவதி கோபம் கொண்டு, உலக்கையால் மகனை ஓங்கி அடித்தாள்.
அடி தாங்காமல் மகன் இறந்து போனான். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், மகனை ஒரு பாயில் சுற்றி வைத்து விட்டு, புதிய உணவை தயாரித்தாள், சீலவதி. நீராடி விட்டு வந்த சிவனடியார்களை வரவேற்று, வாழை இலை போட்டு உணவு பரிமாறத் தொடங்கினாள். அப்போது அடியாராக வந்த ஈசன், ‘‘உன் மகனையும் வரச்சொல்லம்மா, அவனோடு சேர்ந்து சாப்பிடுகிறோம்’’ என்று கூறினார். சீலவதியாரோ, ‘‘அவன் இப்போது வரமாட்டான்’’ என்றாள். அரனாரோ மகன் வந்தால்தான் உணவருந்துவோம் என்று திட்டவட்டமாக சொல்ல, சீலவதி, மிகுந்த கோபத்துடன், ‘‘நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் என் மகனை அடித்த உலக்கையால் உங்களையும் அடித்து விடுவேன்’’ என்று துக்கத்து டன் மிரட்டினாள்.
ஈசன் சிரித்துக் கொண்டே, ‘‘அட யாரம்மா, நீ அடங்காத கழுக்காணியா (வைரம் பாய்ந்த உலக்கை) இருக்கியே?’’ என்று கூறியபி ன், ‘‘நீ பிள்ளையை கூப்பிடு, அவன் வருவான்’’ என்றார். அம்மையாரும் அப்படியே செய்ய, பாயில் சுருட்டி வைத்த பிள்ளை உயிருடன் வந்து அடியாரோடு அமர்ந்து உணவருந்தினான். இந்த அதிசயம் க ண்டு சீலவதியார் நெகிழ்ந்து கை கூப்பினாள். ஈசன் அனைவருக்கும் கைலாசநாதராக ரிஷப வாகனத்தில் காட்சி அருளினார். பிள்ளைக் கறி அமுது படைத்த செருக்கோடு இருந்த சிறுதொண்டர் இந்நிகழ்வு கண்டு பணிவோடு பரமனின் பாதம் பற்றித் தொழுதார். இந்தத் திருவிளையாடலை இறை வன் புரிந்த தலம் இதுவே!
இந்த நிகழ்வு நடந்தது சித்திரை மாதம், பரணி நட்சத்திரத்தன்று. ஆகையால் பரணி நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலமிது. இங் குவந்து கைலாசநாதரையும் காமாட்சியையும் வணங்க, பணிவோடு குன்றாத செல்வமும் சேரும். இத்தலத்தில் திருப்பணி செய்தபோது பூமிக்கடியில் இருந்து மிகப் பழமை வாய்ந்த 13 ஐம்பொன் சிலைகளும் 86 செப்பேடுகளும் கிடைக்கப்பெற்றன. அதன்மூலம் பல வரலாற்றுத் தகவலும் ஆலயச் சிறப்பும் தெரியவந்துள்ளன. தற்போது இந்த ஆலயமும், ஊரில் இருந்த கிராம தேவதையான செல்லியம்மன் கோயிலும் திருப்பணிகள் நிறைவு பெற்று, 23.1.2013 அன்று கும்பாபிஷேகம் காண இருக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கைலாசநாதர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ பழண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum