தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனந்தம் தருவாள் அத்திமர அன்னை

Go down

ஆனந்தம் தருவாள் அத்திமர அன்னை Empty ஆனந்தம் தருவாள் அத்திமர அன்னை

Post  meenu Fri Mar 08, 2013 1:22 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாதரை மனங்குளிர தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்து, மேற்கே திரும்பி இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்தால் செந்நிற கப்பி சாலை நம்மை வரவேற்கும். இந்தப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் கிராமத்துத் தூய வாசனை, நம் நெஞ்சை நிறைவிக்கும். இடதுபுறம் காவிரிப் படுகையில் தழைத்தோங்கியிருக்கின்றன பச்சைப் பசேல் என்ற மரங்கள். வலதுபுறம் குலை குலையாய் காய்த்துத் தொங்கும் வாழைத் தோட்டங்களையும் காணலாம். அதற்கு நடுவே அமைதியாய் அமர்ந்து அருள்பாலிக்கிறாள், அன்னை நாராயணி பிரத் யங்கராதேவி.எண்கோண வடிவில் அன்னையின் விமான பீடம் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் சிங்கமும் தனி மண்டபத்தில் இருக்க, எதிரே அன்னையின் அர்த்த மண்டபமும் அதைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன.

கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள் அன்னை. தனது இடது மேல் கரத்தில் டமருகத்தையும் வலது மேல் கரத்தில் நாக பாசத்தையும் இடது கீழ்கரத்தில் சூலத்தையும் வலது கீழ் கரத்தில் அசுரனின் தலையையும் ஏந்தி சற்றே உக்கிர உருவினளாய் காட்சி தருகிறாள். மண்டை ஓடுகளை மாலையாய் அணிந்துள்ளாள். வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் இடது காலை மடித்தபடியும் அமர்ந்துள்ளாள். செவிகளில் பெரிய குண்டலங்கள் அலங்கரிக்க, தலையின் மேல் சப்தநாகங்கள் படமெடு த்து ஆடுகின்றன. அன்னையின் நெற்றியில் சந்திர கலை காட்சி தருகிறது.

பெரும்பாலும் ஆலயங்களில் இறைவன், இறைவியின் திருமேனிகள் கருங்கற்களில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு எழுந்தருளி யிருக்கும் நாராயணி பிரத்யங்கரா தேவியின் உருவ அமைப்பு அபூர்வமானது. அற்புதமானது. ஆமாம், அன்னையின் திருமேனி, அப்படியே அத்திமரத்தால் உரு வானது. எனவே, அன்னைக்கு எண்ணெய் மற்றும் பிற அபிஷேகங்கள் எதுவும் நடைபெறுவது கிடையாது. அன்னையின் முகத்திற்கு புனுகுச் சட்டமும் மேனிக்கு சாம்பிராணி தைலமும் சாற்றுகிறார்கள். இப்படி சாற்றும் தைலம் நன்றாக உலர வேண்டும் என்பதற்காக, தைலம் சாற்றப்பட்டதும் நடையை மூடிவிடுவதும் இங்கு வழக்கமாக உள்ளது. எனவே, அன்னையை மாதத்தில் மூன்று நாட்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாது.

அமாவாசை அன்று இங்கு நிகும்பலா யாகம் நடைபெறுகிறது. சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த யாகத்தில் அய்யா வாடியில் நடப்பது போலவே நிறைய மிளகாய் இட்டு யாகம் நடக்கிறது. காரமோ, நெடியோ இம்மியளவுகூட வெளியே வராதது சிலிர்க்க வைக்கும் நிஜம். தேய்பிறை அஷ்டமியில் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் விருட்சமாக பவழமல்லி மரம் உள்ளது. தல தீர்த்த மாக காவிரி திகழ்கிறது. தேவியின் விமானத்தில் தென்புறம் சப்த கன்னியர்களில் ஒருவளுமான சாமுண்டியும் வடபுறம் பிராம்மியும் மேல்புறம் வைஷ் ணவியும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். ஸ்ரீரங்கத்துக்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரோட்டில் நடுக்கரை என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆனந்தம் தருவாள் அத்திமர அன்னை
» ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» சந்தோஷம் தருவாள் சாரதாம்பாள்
»  ராஜ யோகம் தருவாள் ராஜராஜேஸ்வரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum