தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தோஷம் தருவாள் சாரதாம்பாள்

Go down

சந்தோஷம் தருவாள் சாரதாம்பாள் Empty சந்தோஷம் தருவாள் சாரதாம்பாள்

Post  ishwarya Thu May 23, 2013 6:28 pm

திருச்சி தில்லை நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அன்னை சாரதாம்பாள் திருக்கோயில், பாம்பன் சுவாமிகளால் உருவானது. சாலையை ஒட்டியுள்ள கோபுர வாசலிலிருந்து பார்த்தாலே மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சாரதாம்பாளின் பளிங்குத் திருவுருவம் நன்கு தெரிகிறது. பாம்பன் சுவாமிகள் திருச்சிக்கு வருகை தந்தபோது இப்பகுதி முழுவதும் வயல்வெளியாக இருந்தது. இந்த இடத்தினைப் பார்த்த சுவாமிகள் இங்கு தெய்வத்தின் அருள் நிறைந்த பகுதியாக இருப்பதை அறிந்தார். கோயில் கட்டும்படி உடனே தனது பக்தர்களுக்கு அருளாணை இட்டார். அவ்வாறு உருவான இந்தக் கோயிலும், இதன் சுற்றுப்புறமும் இப்போது பரபரப்பு மிக்கதாக உள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும், பன்னிரண்டு தூண்கள் கொண்ட பெரிய அர்த்த மண்டபத்தின் கன்னி மூலையில் விநாயகப் பெருமான் எழுந்தரு ளியுள்ளார். அவரைத் தரிசித்தபின், நடுப்பகுதிக்கு வந்தால் ஸ்ரீசக்கரபூர்ண மகா மேருவைத் தரிசிக்கலாம். அந்தச் சக்கர மேருவைத் தரிசித்ததும், மூலவரான சாரதாம்பாளைத் தரிசிக்கிறோம். பளிங்குக் கல்லால் ஆன திருவுருவத்தில், சாந்த முகத்தோடு திகழ்கிறாள், அன்னை. ‘உங்கள் துன் பங்களை தீர்ப்பதற்காக நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொல்வதுபோல் இருக்கிறது அன்னையின் அமர்ந்திருக்கும் அந்தக் கோலம்.

கருவறையின் வலதுபுறத்தில் தனிச் சந்நதியில் பாலகணபதி எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் வடக்குக் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை தரிசனம் அருள்கிறாள். மேலும், கிழக்குப் பகுதியிலுள்ள கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே நவகிரகங்களை தரிசிக்கலாம். நவகிரகங்கள் தத்தமது பத்தினியரோடு அவரவர் திசை பார்த்து வீற்றிருக்கிறார்கள். நீளாதேவியுடன் காட்சி தரும் சனிபகவான், நர்த்தன கணபதியைப் பார்த்துள்ளதால் இங்கு எழுந்தருளியுள்ள சனிபகவானை வழிபட அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்.

கருவறையின் பின்புறம் கிழக்குப் பகுதியில், கோஷ்டத்தில் நடுநாயகமாக மகாலட்சுமி கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்க, அவருக்குப் பக்கத்தில் கு ருவாயூர் கிருஷ்ணன் சிறிய திருவுருவில் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். தென்பகுதியில் உள்ள கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மூலவராகத் திகழும் சாரதாம்பாளின் இடதுபுறத்தில் தனிச் சந்நதியில் பாலமுருகன் நின்ற கோலத்தில் தனித்து எழுந்தருளியிருக்க, அவரது காலடியில் பாம்பன் சுவாமிகள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இது ஓர் அரிய தரிசனம் என்கிறார்கள். மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் கைகூப்பிய நிலையில் தனித்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

தெற்குப்புற சுவர்ப் பகுதியில் சந்தோஷி மாதாவையும் தரிசித்து பலன் பெறலாம். அன்னை சாரதாம்பாளுக்கு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்வார்கள். ஒரு லட்சத்து இருபதாயிரம் வளையல்களைச் சரங்களாக அமைத்து, அம்பாளைச் சுற்றி வண்ண வண்ண வளையல்களால் சரங்களை அலங்கரித்திருப்பது தரிசிப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. அன்னை சாரதாம்பாள், தத்துவ ரூப சரஸ்வதி, கர்வமற்ற வீணை இல்லாத சரஸ்வதி என்று போற்றப்படுகிறாள். நவராத்திரி விழாவின் அலங்காரத்தின்போது மட்டும் வீணையுடன் அன்னை காட்சி தருவாள்.

இதேபோல் ஸ்ரீசக்கர மேருவிற்கும் பட்டாடை அணிவித்து, வளையல்களை சரங்களாக அணிவித்து அழகு பார்க்கிறார்கள். இந்த வளையல்களையெல்லாம் பக்தர்கள் அம்பாளுக்கு காணிக்கையாக அளிக்கிறார்கள். அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை ஆடிப்பூரத்திற்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். பொதுவாக அன் னையின் எதிரில் சிங்க வாகனம் இருக்கும். இங்கோ அன்னையின் எதிரில் நந்தி எழுந்தருளியுள்ளார். அவரது நெற்றியில் சிவபிரானின் சின்னம் உள் ளது தனிச்சிறப்பாகும். நந்தியின் பின்புறம் சிறிய பலிபீடம் உள்ளது. இந்த நந்தி தியான நந்தீஸ்வரராகப் போற்றப்படுகிறார். இங்கு பிரதோஷ கால வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த நந்தீஸ்வரர் அன்னையின் தாய் வீட்டு சீதனமாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அபிஷேகம் காணும் சாரதாம்பாள் பளிங்குத் திருவுருவம், 1983ம் ஆண்டு, சிருங்கேரியில், அபினவ தீர்த்த சுவாமிகளால் பூஜிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. சித்திரை முதல் தேதியன்று சாரதாம்பாளை கனி வகைகளால் அலங்கரிப்பார்கள். அன்று கிட்டும் அன்னையின் தரிசனம், விஷுகனி தரிசனம் என்று போற்றப்படுகிறது. திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் இக்கோயில் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum