மதுரையை மகிழ்விக்கும் தெப்பத் திருவிழா
Page 1 of 1
மதுரையை மகிழ்விக்கும் தெப்பத் திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக் காணும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, தை மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா, மிக முக்கியமானது. தெப்பக்குளம், மதுரையின் பெருமையை பறைசாற்றும் புராதன அம்சங்களில் ஒன்று. அந்த வண்டியூர் மாரி யம்மன் தெப்பக்குளத்தை உருவாக்கியவர் மன்னர் திருமலை நாயக்கர். ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளான தை மாதம், பூச நட்சத்திரத்த ன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தெப்பக்குளத்தில் எழுந்தருளி வலம் வருகிறார்.
இந்த ஆண்டு தெப்பத் திருவிழா ஜனவரி 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு திருவுலா மற்றும் நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 27ம் தேதியோடு நிறைவடைகிறது. அதில் பத்தாம் நாளான 26.1.2013 காலையில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு முத்தீஸ்வரர் கோயிலை அடைவார்கள். மாலையில் அங்கிருந்து ரிஷப வாகனத்தில் தெப்பக்குளத்தை அடைய, அங்கு தெப்பம் முட்டு தள்ளுதல் வைபவம் நடை பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பதினோராம் நாள் கதிரறுப்பு விழா நடைபெறும். முன்பெல்லாம், சிந்தாமணி கிராமத்தை சுற்றிலும் நெல் வயல்கள் சூழ்ந்து இருக்கும். அந்நாட்களில் அம்மன், சுவாமி முன்னிலையில் கதிரறுப்பைத் துவங்குவார்கள்.
தற்போது நெல் வயல்கள் வெகுவாக குறைந்து விட்டாலும் பழக்கம் மட்டும் மாறாமல், இன்றும் இவ்விழா நடைபெற்று வருகிறது. விழாவிற்காக காலை 10 மணிக்கு மேல் சுவாமியும் அம்மனும் தங்கப் பல்லக்கில் உலா வந்து சிந்தாமணி கிராமத்திற்கு எழுந்தருளுவர். பின்னர் கதிரறுப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். பின்னர் இறைத் தம்பதி கோயிலை வந்தடைவர். நிறைவு நாளான ஜனவரி 27 அன்று தெப்பத் திருவிழா நடைபெறும். இதற்காக மணலூரில் இருந்து பம்பு மூலம் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நாளில் விழாவுக்காக அதிகாலை 5 மணிக்கு அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகள் வலம் வந்து, கீழமாசி வீதி, யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை வழியாக தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகின்றனர்.
சாதி, மத வேறுபாடின்றி பக்தர்கள் ‘‘ஸம்போ ஹர ஹர மகாதேவா’’ எனும் கோஷம் விண்ணைத் தொடுமளவிற்கு எழுப்பி வடம் பிடிப்பர். காலை 10:30 மணியில் இருந்து 10:54 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி காலை இரண்டு முறை வலம் வருவர். தெப்பத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தெப்பக்குளத்தை சுற்றிலும் கூடுவர். பின்னர் கோயி லின் மைய மண்டபத்திற்கு இறைவன், அம்மையுடன் எழுந்தருளுவார். அச்சமயம் மைய மண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு பரிவட் டம் கட்டப்படும். மாலை 5 மணியளவில் மைய மண்டபத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மேல் அம்மன், சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி ஒருமுறை வலம் வருவர். அச்சமயம் பௌர்ணமி சந்திரன் வானிலே வலம் வர, வாண வேடிக்கை களுடன் தெப்ப உற்சவம் நடைபெறும். வண்ண மின் விளக்குகள் தெப்பக்குளத்தில் ஒளிர, தெப்பத்தேர் வலம் வருவதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரவு 10 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும் அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவர். தெப்பத் திருவிழாவிற்காக அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பாடானதில் இருந்து விழா நிறைவடைந்து இரவு மீண்டும் கோயில் செல்லும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காடு கோயிலில் தெப்பத் திருவிழா
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» உள்ளூர் திருவிழா
» புத்தகத் திருவிழா
» மாங்கனித் திருவிழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum