தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாங்கனித் திருவிழா

Go down

மாங்கனித் திருவிழா Empty மாங்கனித் திருவிழா

Post  meenu Sat Mar 09, 2013 12:51 pm


மாங்கனித் திருவிழா
கருத்துகள்
12:35:59
Tuesday
2012-08-07
Luxury market to touch 15BN USD



You need to upgrade your Adobe Flash Player to watch this video.

Get Adobe Flash player
MORE VIDEOS

‘அடடா... ஆசையோடு கேட்கிறாரே. அதை சிவனடியார்க்கு படைத்துவிட்டேன் என்றால் கோபம் கொள்வாரோ...ஐயனே... என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்று’. சோழநாட்டிலுள்ள அழகிய கடற்கரை நகரம் காரைக்கால். அங்கே வணிகர்கள் செல்வம் மிகுத்து வாணிபம் செய்து வந்தனர். அவர்களில் ஈகையோடு, கனிந்த பக்தியும் கொண்டவர் தனதத்தனார். ஈசன் அருளால் தனக்குப் பிறந்த மகளுக்கு புனிதவதி எனப் பெயர் சூட்டினார். புனிதவதியும் தந்தையின் அடியொற்றி, ஈசனின் திருவடி பற்றி வளர்ந்தாள்.

அவள் எழிலரசியாய் வளர்ந்து நின்றாள். அந்த எழிலுக்கு காரணம் சிவபக்தி. புனிதவதிக்கு திருமணம் செய்விக்க முடிவு செய்த தனதத்தனார், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி என்ற பெருவணிகரின் மகனான பரமதத்தனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். பரமதத்தன் திறமையாகத் தொழிலை கவனித்தான். புனிதவதியோ கணவனை கடவுளாகப் போற்றி வாழ்ந்தாள். சிவன் புகழ் பாடுவதையும் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதையும் கடமையாகக் கொண்டாள். சிவனடியாரை சிவனாகவே கருதி புனிதவதி செய்யும் சேவையால் மனம் குளிர்ந்த ஈசன், அவளைத் தன் அன்பு வளையத்துக்குள் ஈர்த்துக் கொள்ள விரும்பினார்.

ஒருநாள் பரமதத்தனின் கடைக்கு வந்த ஒரு வணிகன், சுவை மிகுந்த மாங்கனிகள் இரண்டை அன்புப் பரிசாக பரமதத்தனிடம் தந்தான். நன்றி சொல்லி பழங்களைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன், பழங்களை வேலையாளிடம் கொடுத்து தன் இல்லத்தில், புனிதவதியிடம் சேர்ப்பித்தான். பகல் பொழுது. உச்சி வெயில். வயதான சிவனடியார் ஒருவர் பசியால் சோர்வாக வருவதைப் பார்த்தாள், புனிதவதி. அன்பொழுக அவரை வரவேற்றாள். இருக்கையில் அமரவைத்து புதிதாய் சமைத்த சாதத்தைப் பரிமாறினாள். கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் ஒன்றை எடுத்து நறுக்கி பக்தியோடு அவர் இலையில் வைத்தாள். சாப்பிட்டு முடித்த சிவனடியார் மனம் குளிர்ந்து வாழ்த்திவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

சிவனடியார் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பரமதத்தன் பசியுடன் வீடு வந்தான். அன்போடு அமுது படைத்தாள், புனிதவதி. மற்றொரு மாம்பழத்தை கணவனின் இலையில் வைத்தாள். அப்பழத்தை சுவைத்த பரமதத்தன், ‘‘ஆஹா... என்ன சுவை! இன்னொரு பழத்தையும் கொண்டு வா’’ என்றான்.
‘அடடா... ஆசையோடு கேட்கிறாரே. அதை சிவனடியார்க்கு படைத்துவிட்டேன் என்றால் கோபம் கொள்வாரோ...ஐயனே... என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்று’ என்று தனியே சென்று கைகூப்பித் தொழுதாள். தயாபரன் கனிவு கொண்டான். அவள் கைகளில் ஒரு மாங்கனியை விழச் செய்தான்! பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கணவனிடம் வந்து, கயிலைக் கடவுள் கொடுத்தக் கனியை அவன் இலையில் இட்டாள்.

கனியை ருசித்த பரமதத்தன், ‘‘இது அந்தப் பழத்தைவிட ஆயிரம் மடங்கு அதிக சுவையாக இருக்கிறதே, எப்படி?’’ என்று கேட்டான். புனிதவதி நடந்ததைச் சொன்னாள். ஆச்சர்யத்தில் சிலிர்த்தாலும் சந்தேகம் தொனிக்க அவன், ‘‘பரமனிடம் இன்னொரு பழம் கேள்’’ என்றான். அவள் மீண்டும் கருணாமூர்த்தியை சரணாகதி அடைந்தாள். இன்னொரு பழமும் கிடைத்தது. இதைக் கண்ட பரமதத்தன், ‘இவள் சாதாரண பெண் அல்ல, கடவுள்’ என மனம் நடுங்கினான். அவளிடமிருந்து மெல்ல விலகினான். வியாபாரத்திற்கு சென்று வருகிறேன் என்று சொல்லி புறப்பட்ட அவன், பாண்டிய நாட்டிற்கு சென்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்; அங்கேயே தங்கிவிட்டான்.

அங்கே அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு புனிதவதி எனப் பெயரிட்டான். வியாபாரம் செய்யச் சென்ற கணவன் திரும்ப வருவான் எனக் காத்திருந்த புனிதவதி, அவன் இன்னொரு திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டுத் துடித்தாள். உறவுகள் சூழ கணவன் வாழும் நகரத்தை அடைந்தாள். அதை அறிந்து, தன் புது மனைவி, குழந்தையுடன் வந்த பரமதத்தன், ‘‘உனது அருளால் நான் நல்லபடியாக வாழ்கிறேன். என் குழந்தைக்கு உன் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்’’ என்று கூறி குடும்பத்தோடு புனிதவதியின் காலில் விழுந்து வணங்கினான்.

இதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த புனிதவதி, இதுவும் பரமனின் திருவிளையாடலே என்று புரிந்து கொண்டார். அப்போதே பரமனிடம் வேண்டி, சிவ பூத கணங்களைப் போன்றே, தானும் பேயுரு பெற்றுக் கொண்டார். இனி சிவனே எல்லாம் என்றுணர்ந்து திருக்கயிலாயத்தை தரிசிக்க வேகமாய்ச் சென்றார். திருக்கயிலாயத்தை நெருங்கினார். ஈசன் உறையும் மலையை காலால் மிதிப்பதா எனக் கருதி தலையால் நகர்ந்தார். கருணைக் கடலான மகேசன், தலையால் நகர்ந்து வரும் அவரை ‘‘அம்மையே...’’ என்றழைக்க, ‘‘அப்பா...’’என்று கூவி ஆடலரசனின் பாதம் பணிந்தார் புனிதவதியார்.

‘‘அம்மா, உனக்கு என்ன வேண்டும்?’’ என்று ஈசன் கேட்க, ‘‘இன்னொரு பிறவி இனி வேண்டாம். அப்படி இருந்தாலும் உன்னை மறவாத மனம் வேண்டும். சத்திய வடிவமே. நீ ஆனந்த நடனம் ஆடும் போது மகிழ்ந்து பாடியபடி நின் திருவடியின் கீழ் எப்பொழுதும் நான் இருக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்ள, அதை ஏற்று ஈசன் அருள் புரிந்தான். அதன்படி பழையனூர் திருவாலங்காட்டில் வேதநாதனின் ஆனந்தக் கூத்தை கண்டுகளித்தார்; ‘‘கொங்கை திரங்கி...’’எனத் தொடங்கும் பதிகம் பாடிப் பரவசமானார், காரைக்கால் அம்மையாரான புனிதவதியார்.

காரைக்காலில் புனிதவதியாரின் பக்தியைச் சிறப்பிக்கும் வகையில் மாங்கனித் திருவிழா இந்த வருடம் 3.7.2012 அன்று நடைபெறுகிறது. அவ்வமயம் காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் புனிதவதியாரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளாக நிறைவேறுகின்றன. ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு மாங்கனி இனிமையாய் வாழ்க்கையில் சுவைகூட இறையருள் பெறுகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» செருப்படித் திருவிழா
» குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
» உள்ளூர் திருவிழா
» மாசிமகத் திருவிழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum