தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான்கு குழந்தைகளுக்கு தாயாக ஜோதிர்மயி

Go down

நான்கு குழந்தைகளுக்கு தாயாக ஜோதிர்மயி Empty நான்கு குழந்தைகளுக்கு தாயாக ஜோதிர்மயி

Post  ishwarya Fri Mar 08, 2013 1:03 pm


கல்யாணராமன், மீசை மாதவன் போன்ற மலையாளப் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்த ஜோதிர்மயியை சரண் தனது படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்தார். அதைப் பார்த்த சுந்தர் சி தனது தலைநகரம் படத்தில் ஹீரோயினாக்கினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஜோதிர்மயி.

தமிழுக்கு வரும் போது அவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய். இந்த ரகசியம் பலருக்கு இன்னமும் தெ‌ரியாது. வாய்ப்புகள் அருகிப் போன போது நான் அவன் இல்லை போன்ற படங்களில் படு கவர்ச்சியாக நடிக்கத் துணிந்தார். இது ஜோதிர்மயியின் கணவருக்குப் பிடிக்கவில்லை. தினம் பிரச்சனை. கே‌ரியரா, ஹஸ்பெண்டா...? ஜோதிர்மயிக்கு சாய்ஸ் தேவைப்படவில்லை, கே‌ரியர் என்று கணவ‌‌ரிடம் விவாகரத்து கேட்டார்.

இந்த குடும்ப விவகாரத்தால் சில காலம் நடிக்காமல் இருந்தவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றை தொகுத்தளித்தார். ஆனால் திருமணமானவர்களையும் கதாநாயகிகளையும் ஹீரோயினாக்கிப் பார்க்கும் பே‌ரிளம் நாடு கேரளா. ஜோதிர்மயிக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹவுஸ்ஃபுல் என்ற படத்தில் சேல்ஸ் வுமனாக நடிக்கிறார் ஜோதிர்மயி. இவரது கணவர் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு கடவுள் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தருகிறார். ஆம், நான்கு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் ஜோதிர்மயி.

படத்தை தமிழில் டப் செய்வீங்களா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்...
» தாய்க்குத் தாயாக.....
» தாயாக போகும் நடிகை சங்கீதா
» நீர்ப்பறவை - கன்னி தாய் காதல் தாயாக மாறியது
» அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum