தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்...

Go down

 நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்... Empty நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்...

Post  ishwarya Thu May 23, 2013 2:19 pm

கோயில்களின் நகரமான கும்பகோணம் மிகவும் புண்ணியம் வாய்ந்த தலமாகும். காசி பாவம் தீர்க்கும் மாபெரும் க்ஷேத்ரம். ஆனால், காசியில் செய்த பாவத்தை கும்பகோணத்தில்தான் தீர்க்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த பரத கண்டத்தில், சச்சிதானந்த பிழம்பாகிய சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு பல்வேறு தலங்களில் எழுந்தருளியிருக்கிறான். அப்படிப்பட்ட அற்புதத் தலங்களில் கும்பகோணமும் ஒன்று. காவிரியும் அரசலாறும் மாலைகளாக அமைந்த நகரமாகவும் இத்தலம் விளங்குகிறது. மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் விழாக்கோலம் பூணும்.

பக்தர்கள் நாம கோஷமிட்டபடியே கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு தலமாகச் செல்வதை பார்க்கவே பாக்கியம் செய்திருக்க வேண்டும். குடந்தை மொத்தமுமே குதூகலமாக சிவனை ஆராதிப்பதை ஆனந்தமாகக் காணலாம். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (பௌர்ணமியை அடுத்த) சதுர்த்தி திதியன்று வருவது தான் மகா சிவராத்திரியாகும். மகா பிரளய காலத்தில் அண்ட சராசரங்களும் நீர்மயமாக மாறின. சிவ சொரூபமான திருக்கயிலாய மலை மட்டும் பெருவெள்ளத்தில் அழியாமல் மாபெரும் லிங்கமாக காட்சி அளித்தது.

அந்த பெருலிங்கத் திருவுருவிலிருந்து மாபெரும் ஜோதி ரூபமாய் சிவபெருமான் வெளிப்பட்டு பிரம்மா, திரு மால், ருத்ரன், இந்திரன் முதலானவர்களையும் மனிதர் முதலான அனைத்து ஜீவராசிகளையும் தாவர சங்கமங்களையும் பஞ்ச பூதங்களையும் படைத்த ருளினார். சிவனை விட்டு பிரியாத சக்தி, அனைத்து உயிர்களும் உய்வுற நான்கு காலங்களையும் சிவனை பூஜித¢த அந்த இரவே மகா சிவராத்திரி என போற்றப்படுகிறது. இந்நாளில் ஈசனை வழிபடும் அனைவருக்கும் சகல நன்மைகளையும் அருள வேண்டும் என இறைவி வேண்டிக்கொள்ள, இறைவனும் அவ்வாறே அனுக்கிரகம் செய்தருளினார்.

பிரம்மனும், திருமாலும் தானே பிரம்மம் என்று போட்டியிட்டனர். அப்போது பரம்பொருளான சிவபெருமான் மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தி கூடிய இர வில் தங்கள் தவறை உணர்ந்து சிவனை வேண்டியபோது, ஜோதிமயமாக ஈசன் காட்சியளித்தது சிவராத்திரி அன்றுதான். சிவராத்திரியில் சிறந்த நேரம் லிங்கோத்பவ காலமாகும். திரேதா யுகத்தில் அம்பாள் சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் உலகமெல்லாம் இருள, உமையம்மை சிவபெருமானை பூஜிக்க, லிங்கத்தில் சிவபெருமான் தோன்றி காட்சி கொடுத்தது லிங்கோத்பவ காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் தரிசனம் செய்தால் நான்கு காலமும் தரிசனம் செய்த பலன் உண்டு. இக்காலம் இரவு 11:30 மணிக்கு மேல் 1 மணி வரையாகும்.

துவாபர யுகத்தில் திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தியபோது அது சிவபெருமானை தாக்காது இருக்க தேவர்கள் அந்த இரவு முழுவதும் சிவபெருமானை பூஜித்தனர். அதுவே சிவராத்திரி எனப்பட்டது. கலியுகத்தில் உலக இருளை நீக்குவதற்காக ருத்திரர்கள் பூஜித¢ ததும் சிவராத்திரி இரவில்தான். இந்த நான்கு கால பூஜைகளையும் நான்கு யுகங்களாக கொள்ளலாம். இதனை நான்கு ஜாமங்கள் என்றும் கூறுவர். முதல் காலமான கிருத யுகத்தில் விநாயகரும் இரண்டாவதான திரேதா யுகத்தில் முருகனும், மூன்றாவதான துவாபர யுகத்தில் பிரம்மாவும் நான்காவதான கலியுகத்தில் மகாவிஷ்ணுவும் ஈசனை பூஜித்தார்கள்.

ஆகவே சிவராத்திரி அன்று திருமால், பிரம்மன், உமையம்மை மற்றும் அனைத்து தேவர்களும் சிவலிங்க திருமேனியில் இருப்ப தால் அன்று சிவனை வழிபட்டவர்கள் நான்கு யுகங்களிலும் அவர்களை வழிபட்ட அருளைப் பெறுவார்கள். எல்லா சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி வழிபாட்டை பக்தர்கள் மேற்கொண்டாலும், குறிப்பாக நான்கு தலங்கள் சிவராத்திரிக்கு உகந்தவையாக அமைந்திருக்கின்றன. ஆதிசேஷன் சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் நான்கு தலங்களிலும் வழிபட்டு வருவதாக ஆதியிலிருந்து ஐதீகம் உள்ளது. அவை என்னென்ன தலங்கள்? பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்தபடி ஆதிசேஷன் பூமியை பல காலம் தாங்கி வந்தார்.

பூமியின் பாரம் தாங்கமுடியாமல் அவதி யுற்ற அவர், சிவபெருமானை வேண்டினார். மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் கீழ்கோட்டமான நாகேஸ்வரன் கோயிலில் முதல் காலத்திலும் திரு நாகேஸ்வரத்தில் இரண்டாவது காலத்திலும் திருப்பாம்புரத்தில் மூன்றாவது காலத்திலும் நாகூர் நாகநாதசுவாமி திருத்தலத்தில் நான்காவது காலத்திலும் தன்னை வழிபட்டால் பழைய வலிமை கிடைக்கும் என ஈசன் அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தமது தேவிகளுடன் மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் பூஜை செய்து பழைய பொலிவைப் பெற்றார். இதுதவிர வேறொரு புராணமும் ஆதிசேஷனைப் பற்றி கூறப்படுகிறது.

முன்பொரு காலத்தில் சம்புபத்தன் என்ற பிராமணன், தன் மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் காட்டில் வசித்து வந்தான். ஒருநாள் அந்தச் சிறுவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்புகளுக்கு அரசனான ஆதிசேஷன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை அந்தச் சிறுவன் பார்த்து விட்டான். அதை உணர்ந்த ஆதிசேஷன் முன்வினைப் பயன் காரணமாக சீறிப்பாய்ந்து அந்த சிறுவனை கடிக்க அவன் இறந்து விட்டான். தன் மகன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் வேதனைக்குள்ளான சம்புபத்தனின் மனைவி, கணவனிடம் மகனை காணவில் லையே என்று ஏக்கத்துடன் கேட்டாள்.

மகனைத் தேடி காட்டில் திரிந்த சம்புபத்தன் தன் மகன் பிணமாக கிடப்பதை பார்த்தான். தன் ஞான திருஷ்டியால் ஆதிசேஷன் தீண்டியதால்தான் தன் மகனுக்கு இந்த கதி நேர்ந்தது என்பதை உணர்ந்து கோபமுற்றான். உடனே ஆதிசேஷனை நோக்கி, ‘‘நீ நாகர் உலகத்தை விட்டு நீங்கி, அறிவும் வலிமையும் இழந்து தனிப்பட்டவனாய் இந்த பூலோகத்தில் காட்டில் திரியக்கடவாய்’’ என்று சபித்தான். நடுநடுங்கிய நாக அரசன் சம்புபத்தனின் காலில் விழுந்து வணங்கி தான் செய்த தவறை உணர்ந்து, தன் சாபம் எப்போது தீரும் என்று கேட்டான். அதற்கு சம்புபத்தன் ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உன் தந்தை காசிபரை நீ காண்பாய். அப்போது உன் சாபம் தீரும்’’ என்றான்.

அதன்படி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிசேஷன் தன் தந்தையைக் கண்டு வணங்கி, மாசி மாத மகாசிவராத்திரி நாளில் முதற் காலம் கும்ப கோணம் வில்வ வனத்திலுள்ள நாகநாத சுவாமியையும் இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் செண்பகாரண்யத்திலுள்ள நாகநாதரையும் மூன்றாம் காலம் திருப்பாம்புரம் வன்னி வனத்திலுள்ள நாகநாதரையும் (சேஷபுரீஸ்வரர்), நான்காம் காலம் நாகூர் புன்னாக வனத்திலுள்ள நாகநாத சுவாமியை யும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி சாப விமோசனம் பெற்று நாகூர் நாகநாத சுவாமியின் திருவடிகளை சேர்ந்து முக்தி அடைந்தான்.

நாகூர் தலத்தில் நாகநாத சுவாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறும். சிவபெருமான் நாகராஜனுக்கு காட்சி கொடுக்க, நாகராஜன் சாபவி மோசனம் அடைவான். பின்னர் காட்சி கொடுத்த நாயனார் திருவீதி உலா நடைபெறும். தமிழகத்தில் உள்ள ராகு தலங்களிலேயே காட்சி கொடுத்த நாயனார் திருவீதி உலா நடைபெறுவது நாகூர் நாகநாத சுவாமி திருக்கோயிலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாகூரில் யாரையும் நல்ல பாம்பு தீண்டியது இல்லை என்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

10.3.2013 அன்று, இரவு 10 மணிக்கு முதல்கால பூஜையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும் நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையை திருநாகேஸ்வரத்திலும் அதிகாலை 2 மணிக்கு மூன்றாவது கால பூஜையை திருப்பாம்புரத்திலும் அதிகாலை 4 மணிக்கு நான்காவது கால பூஜையை நாகூரிலும் தரிசிக்கலாம்; சிவனருள் பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum