அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குக
Page 1 of 1

ஐம்பூதங்களாய், அகிலத்தின் இயக்கங்களாய் விளங்கி, ஆட்கொண்டருளும் பரமேஸ்வரன் வீற்றிருந்து அருள்புரியும் அரிய தலங்களுள் திருப்பராய்த்து றையும் ஒன்று. இத்தலம் சோழ நன்நாட்டின் காவிரித் தென்கரைத் தலங்களுள் மூன்றாவதாகப் பாடல்பெற்ற திருத்தலமாக போற்றப்படுகின்றது. இத்தலத்தினை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோர் பாடிச் சிறப்பித்துள்ளனர். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ்
பாடியுள்ளார். குடகு மலையில் தொடங்கிய தன் பயணத்தை காவிரித்தாய் அகலமாக்கிக் கொள்ளும் இடம் இந்த பராய்த்துறை. இதனால் அகண்ட காவிரி என பெயர் பெறுகிறது இந்த பொன்னி நதி.
இப்பராய்த்துறைக்கு சற்று தூரத்தில் பெருங்கிளையாக கொள்ளிடம் என்று பிரிகிறாள். ஆதியில் தாருகாவனம் எனப் போற்றப்பட்டது இத்தலமே. இந்த தாருகாவனத்தில் வாழ்ந்த 48,000 ரிஷிகளும் தாம் செய்யும் கர்மங்களே (செயல்கள்) நல்ல பலனையும், தீய பலனையும் அளிக்க வல்லதென்றும், இதற்கு இறைவனது துணை தேவையில்லை என்றும் மிகுந்த செருக்குடன் வாழ்ந்து வந்தனர். இவர்களது பத்தினியரும் தம் கற்பின் வலிமையால் எதையும் சாதித்து விடலாம் என்ற ஆணவத்துடன் இருந்தனர். அவர்களது ஆணவத்தினை அழிக்க எண்ணிய பரமேஸ்வரன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருக்கொண்டு முனிவர்களின் தபோநிலையையும், முனி பத்தினியரின் ஆணவத்தையும் குலைத்தனர்.
இதனால் கோபங்கொண்ட ரிஷிகள் அபிசார வேள்வி (ஏவல் யாகம்) நடத்தி, இறைவனை அழிக்க எண்ணினர். இறைவனை அழிக்க முடியுமா! இறுதியில் வென்றது இறைவனே! பின்னர் 48,000 ரிஷிகளும், சிவபெருமானிடம் ஞானம் பெற்று, தாருகாவன ஈஸ்வரனைப் பூஜித்து முக்தியுற்றனர். பல வகைகளில் மூலிகையாக உதவும் தாருகா மரம், தமிழில் பராய் எனப்படுகிறது. இத்தாருகா மரங்கள் நிறைந்த வனத்தினிடையே உதித்த சுயம்பு லிங்கமாதலால் இத்தல ஈசன் தாருகாவன ஈசன் என்று போற்றப்பட்டார். துலா மாதமென்னும் ஐப்பசி மாத முதல் நாளில் இந்த பராய்த்துறையில் ஸ்நானம் செய்வது மிகுந்த பலன் அளிக்கவல்லது.
ஐப்பசி முதல் நாளில் (முதல் முழுக்கு) இந்த பராய்த்துறையிலும் கடைசி நாளில் (கடை முழுக்கு) மயிலாடுதுறையிலும் ஸ்நானம் செய்வதை தொன்று தொட்டு வரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எண்ணற்ற பக்தர்கள். அச்சமயம் பராய்த்துறை ஈசனும் அம்பிகையும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது! ஐப்பசி மாதம் முழுவதும் இங்கே நீராடலாம்! அப்போது வரும் புது வெள்ளத்தில் தாதுக்கள் நிறைந்திருக்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்! நமது பாவங்களும் துன்பங்களும் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
சாலையை ஒட்டிய மண்டப நுழைவாயில் வழியே உள்ளே செல்ல கல்யாண மண்டபமும், ராமகிருஷ்ண தபோவனமும் எதிரே திருக்குளமும் அமைந் துள்ளன. அடுத்ததாக சிற்ப எழில் கொஞ்சும் அழகிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் 70 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. உள்ளே ஒரே மண்டப வளா கத்துடன் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர் அமைந்திருக்கிறார்கள். இரண்டாம் ராஜகோபுரம் ஐந்து நிலை மாடத்துடன் அழகுறத் திகழ்கிறது. இதனுள் ஓர் பிராகார அமைப்பும், அனேக கோஷ்ட தெய்வங்களும் வீற்ற ருள்கின்றனர்.
உள்ளமைப்பு மூடுதளமாக அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் செப்பனிடப்பட்ட இவ்வாலயம் மிகுந்த கலைநயத்துடன் திகழ்கிறது.
ஸ்வாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. கருவறையில் தாருகாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தமாக வீற்றிருந்து அருள்மழை பொழிகிறார். அவருக்கு பராய்த்துறைநாதர், செல்வர் ஆகிய திருநாமங்களும் உண்டு. மகா மண்டபத்திலேயே தென்முக சந்நதியுள் நின்ற வண்ணம் வேண்டும் வரங்களை நல்குகின்றாள், அன்னை ஹேமவர்ணாம்பிகை. பசும்பொன்மயிலாம்பிகை, ஹைமவதி ஆகிய திருநாமங்களாலும் அழைக்கப் பெறுகின்றாள்.
கணபதி, கந்தன், கஜலக்ஷ்மி ஆகியோருக்கும் இங்கே தனித்தனிச் சந்நதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் தனி மண்டபத்துள் காணப்படுகின்றார். இங் குள்ள தட்சிணாமூர்த்தி வீராசனத் திருக்கோலத்தில் வீற்றருள்கின்றார். மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதில் அர்த்தநாரீஸ்வரர் காணப்படுகின்றார். மேலும், 63 நாயன்மார்களோடு, பஞ்சலிங்க தரிசனமும் காணலாம். இரண்டு பெரிய பிராகாரங்களைக் கொண்டு ஆலயம் பிரமாண்டத்தையும், கலைநயத்தையும் பிரதிபலிக்கின்றது. தல தீர்த்தமாக காவிரி ஆறு ஆலயத்தின் வடபால் பேருந்து சாலைக்கு அப்பால் பாய்கின்றது. தல விருட்சம் தாருகா எனப்படும் தேவதாரு மரமாகும். இதுவே பராய்மரம் எனப்படுகிறது. ஆலய வெளிப்பிராகாரத்தில் இவை நிறைந்து காணப்படுகின்றன.
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் ஆல யம் திறந்திருக்கும். சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம் ஆகியவற்றோடு வைகாசி மாதம் 10ம் நாள் பிரம்மோற்சவமும் சிறப்புற நடைபெறுகின்றது. அதில் 5ம் நாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 6ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9ம் நாள் திருத்தேர் உலாவும், 10ம் நாள் விசாக தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.இத்தல ஈசனை வழிபட்டு, பராய் மரப்பட்டையினை மஞ்சளுடன் அரைத்து, தோல் நோய் உள்ளவர்கள் பூசிக் கொண்டால் விரைவில் அந் நோய் நீங் குகிறது. இத்தல வழிபாடு, துன்பங்களை துடைக்கும். தடைகளை விலக்கும். திருப்பங்களை நிகழ்த்தும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. ஈஸ்வரனே அகில உலகிற்கும் கர்த்தா என்பதை ரிஷிகள் உணர்ந்தது போல், நாமும் அவரை உணர்ந்து அவனருள் பெற்று உய்வடைவோம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் – ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!
» வாராகி நவராத்திரி
» வாராகி நவராத்திரி
» ஸ்ரீ வாராகி வழிபாடு
» தாய்க்குத் தாயாக.....
» வாராகி நவராத்திரி
» வாராகி நவராத்திரி
» ஸ்ரீ வாராகி வழிபாடு
» தாய்க்குத் தாயாக.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum