தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜோடி யாருங்கிறது சஸ்பென்ஸ் - தாப்ஸி

Go down

ஜோடி யாருங்கிறது சஸ்பென்ஸ் - தாப்ஸி Empty ஜோடி யாருங்கிறது சஸ்பென்ஸ் - தாப்ஸி

Post  ishwarya Fri Mar 08, 2013 12:11 pm


இரண்டு நடிகைகள் ஒன்றாக நடித்தால் யாருக்கு மகிழ்ச்சியோ தெ‌ரியாது, நம்ம சாதிக்கு... அதாங்க பத்தி‌ரிகைக்காரங்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும். இரண்டில் யாராவது ஒருவரை பிடித்து, அவங்களோடு உங்களுக்கு மோதலாமே என்று கோர்த்துவிடுவதில் அப்படியொரு இன்பம்.

ஏற்கனவே தாப்ஸிக்காக இரண்டு மாநில நடிகர்கள் தாவாங்கட்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பக்கமும் அண்ணா என்று விளித்து நிலைமையை மன்மோகன் சிங்கைவிட திறமையாக கையாண்டு அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தாப்ஸி. அவ‌ரிடம் போய் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் மோதலாமே என்று கேட்டிருக்கிறார் ஒருவர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜித் நடித்துவரும் பெய‌ரிடப்படாதப் படத்தில் நயன்தாரா, ஆர்யா, ராணாவுடன் தாப்ஸியும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கினாலும் கொஞ்சம் லேட்டாகதான் இந்த டீமுடன் இணைந்தார் தாப்ஸி.

அடிதடியையே சமாளித்த தாப்ஸி நிருப‌ரின் இந்த சின்ன அம்புக்கா அகப்படுவார்?

முதல்நாள் ஷுட்டிங்கில் கொஞ்சம் படப்படப்பாக இருந்தது உண்மைதான். அதை சாந்தப்படுத்தி என்னை சமநிலைக்கு கொண்டு வந்ததே நயன்தாராதான். நாங்க இப்போ திக் ப்ரெண்ட்ஸ் என்று யானை வேட்டைக்கு வந்தவருக்கு எலிப்புழுக்கை பதிலை தந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தாப்ஸி யாருக்கு ஜோடி என்பது இன்னும் பு‌ரிபடாத மர்மமாகவே உள்ளது. அதற்கும் ஒரு தூண்டிலை போட்டுப் பார்த்திருக்கிறார். அதெல்லாம் டாப் சீக்ரெட் என்று நடையை கட்ட, நிருபர் க்ளீன் நாக் அவுட்.

நடிக்க கத்துக்கிறாங்களோ இல்லையோ இப்பவெல்லாம் நல்லா பேச கத்துக்குறாங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum