தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிவுட் பராக் - கோடம்பாக்கமே விழித்தெழு

Go down

பாலிவுட் பராக் - கோடம்பாக்கமே விழித்தெழு Empty பாலிவுட் பராக் - கோடம்பாக்கமே விழித்தெழு

Post  ishwarya Fri Mar 08, 2013 11:41 am

தமிழ் சினிமாவுடன் ஒப்பிடுகையில் இந்தியில் புதிய முயற்சிகள் அதிகம் வருகின்றன. கோடம்பாக்கத்தில் யார் படமெடுக்க வந்தாலும் காதல் என்னும் கண்ணாடியோடுதான் வருகிறார்கள். அதைத்தாண்டி அவர்களால் எதையும் பார்க்க முடியவதில்லை.


என்னதான் மிகப்பெ‌ரிய படமாக இருந்தாலும் இந்திப் படங்கள் தமிழகத்தில் காற்று வாங்கவே செய்யும். சென்னை விதிவிலக்கு. இப்போது பார்த்தால் இந்த விதிவிலக்கை திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற சிறிய ஊர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் போலிருக்கிறது.

சல்மானின் ஏக் தா டைகர், அதற்கு முன் வந்த டர்ட்டி பிக்சர், கஹானி போன்ற படங்கள் சிறிய ஊர்களிலும் பெ‌ரிய கலெக்சனை சாதித்துள்ளது. சல்மான் படம் தமிழகத்தில் ஒன்றரை கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கேரளாவில்தான் ஊருக்கு ஒரு திரையரங்கில் இந்திப் படம் ஓடும். இப்படியே போனால் அந்த நிலை தமிழகத்துக்கு வரும் நாள் தொலைவில் இல்லை.

மதூர் பண்டார்க‌ரின் ஹீரோயின், கஹானி, டர்ட்டி பிக்சர் போன்று தமிழர்களை கவரவில்லை. இதை வைத்து இந்திப் படங்களுக்கு தமிழகத்தில் அப்படியொன்றும் ஆதரவில்லை என சிலர் குறிப்பிடுகிறார்கள். உண்மை என்னவெனில் ஹீரோயின் மும்பையிலேயே முதல்நாள் 40 முதல் 60 சதவீத கலெக்சனைதான் பெற்றிருக்கிறது.

முன்பு ஒன்றிரண்டு திரையரங்குகளில் வெளியான இந்திப் படங்கள் இன்று ஒரு மீடியம் தமிழ் பட்ஜெட் படத்தின் தியேட்டர்களை ஆக்கிரமிக்கின்றன. ர‌ஜினி, கமல் படங்களுக்கு பயந்தது போய் சல்மான், ஷாருக் பட ‌ரிலீஸுக்கும் லோ பட்ஜெட் படங்கள் பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

காதல் மயக்கத்திலிருந்து கோடம்பாக்கம் விழித்தெழாவிட்டால் இந்திப் படங்கள் போட்டியாக வந்து நிற்கும் ஆபத்தை தவிர்க்க முடியாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum