அமலா பாலும் ஐந்தாவது பில்லரும்
Page 1 of 1
அமலா பாலும் ஐந்தாவது பில்லரும்
பிப்த் பில்லர் டாட் ஆர்க் என்ற இணையதளத்தில் அமலா பால் ஒரு அரிய புரட்சி குறித்தும், அதில் தான் பங்காற்றி வருவது குறித்தும் உணர்ச்சி மேலிட உரையாற்றியிருக்கிறார். கேட்டால் புல்லரிக்கும்.
அதாவது அமெரிக்காவில் வசிக்கும் ஓர் இந்திய குடிமகன் ஜனநாயகத்தில் நான்கு தூண்கள்தானே இருக்கிறது என்று ஐந்தாவது ஒரு தூணாக ஊழல் ஒழிப்பு என்ற தூணை உருவாக்கியிருக்கிறார். அமலா பால் இதில் ஒரு மெம்பர். ஊழலே இந்தியாவை குட்டிச் சுவராக்குகிறது என்ற புதிய கண்டு பிடிப்புடன் களமிறங்கியிருக்கும் இவர்கள் ரேஷன் கார்ட், சாதி சான்றிதழ் போன்றவற்றிற்கு லோக்கல் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினால் அதை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் குழு அமைக்கப் போகிறார்களாம். இப்படி குழு அமைத்து தட்டிக் கேட்டு லஞ்சத்தை ஒழித்து இந்தியாவை வல்லரசு ஆக்கப் போகிறார்களாம். இதற்கு அமலா பால் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
சீமாட்டிகளுக்கும் சீமான்களுக்கும் 21 ஆம் நூற்றாண்டில் ஊழல் ஒழிப்பதுதான் பொழுதுபோக்கு. இவர்கள் தங்கள் மட்டத்தில் - நிலக்கரி ஊழல், அலைகற்றை ஊழல் போன்றவற்றை கணக்கில் எடுப்பதில்லை. ஐம்பதும் நூறும் வாங்கும் ஆட்கள்தான் இவர்களின் டார்கெட். இந்த புதிய மோஸ்தரின் புதிய தேவதைதான் நம் அமலா பால். ஒவ்வொரு படத்துக்கும் கறுப்பிலும் வெள்ளையிலும் சம்பளம் வாங்குகிறவர்களின் ஊழல் ஒழிப்பை கேட்டால்...
வேண்டாம். விட்டு விடுவோம். பிதாவே... இவர்கள் தாங்கள் செய்யவது என்னதென்று தெரிந்தே செய்கிறார்கள். இவர்களை மன்னிக்காதேயும்.
அமலா பால் தமிழ் சினிமா
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோகன்லாலுடன் அமலா!
» மெருகேறும் அமலா பாலின் ரகசியம்
» சோனாவின் ஐந்தாவது அவதாரம்
» சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!
» அமலா பாலின்தலைவா அனுபவம்
» மெருகேறும் அமலா பாலின் ரகசியம்
» சோனாவின் ஐந்தாவது அவதாரம்
» சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!
» அமலா பாலின்தலைவா அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum