தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் படம் – சர்ச்சையும், சந்தோஷமும்

Go down

விஜய் படம் – சர்ச்சையும், சந்தோஷமும் Empty விஜய் படம் – சர்ச்சையும், சந்தோஷமும்

Post  ishwarya Thu Mar 07, 2013 4:43 pm


விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் குறித்து சர்ச்சைகள் இருக்கும் அளவுக்கு சந்தோஷமும் இருக்கிறது. முதலில் நல்ல விஷயத்தை பார்ப்போம்.

இந்த புதிய படத்துக்கு தலைவன் என்ற பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இதே பெயரை ஏற்கனவே வேறு சிலர் பதிவு செய்திருப்பதால் பிரச்சனை உருவாகும் என்று, வேறு நல்ல பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தலைவனை பதிவு செய்து வைத்திருப்பவர்களிடம் காம்ப்ரமைஸ் பேசவும் தயாராகி வருகிறார்கள்.

படத்துக்கு ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு நீரவ் ஷா, எடிட்டிங் ஆண்டனி. இப்போதைக்கு இவர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர். சத்யரா‌ஜ்அல்லது நாசர் நடிக்கக் கூடும். படத்தின் முக்கியமான காட்சிகளை ஸ்பெயினில் எடுக்கும் திட்டம் ஒன்றும் உள்ளது.

தாண்டவம் பஞ்சாயத்தின் போது இயக்குனர் விஜய் பாரதிராஜா முன்னிலையில் பொன்னுசாமி இயக்கும் படத்தை தயா‌ரிப்பதாக வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. படம் வெளியான பிறகு விஜய் இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இது பொன்னுசாமிக்கு ஆதரவாக உள்ள உதவி இயக்குனர்களின் புதிய அலைகள் அமைப்பை உசுப்பேற்றியிருக்கிறது. அவர்கள் விஜய் இயக்கும் எந்தப் படமாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் படத்தின் முதல் ஷெட்யூல் ஸ்பெயினில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த விஜய் படத்தில் படத்திற்கு இணையாக படத்துக்கு வெளியேயும் ஆக் ஷன் காட்சிகள் தூள் பறக்கும்.
இயக்குனர் விஜய், நடிகர் விஜய்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum