முகமூடியும் முழுப்பக்க சர்ச்சையும்
Page 1 of 1
முகமூடியும் முழுப்பக்க சர்ச்சையும்
முகமூடி ட்ரெய்லர் ரசிகர்கள் எதிர்பார்த்த சூப்பர் ஹீரோ எஃபெக்டுடன் இல்லை என்று பரவலான கருத்து இருக்கிறது. சண்டைக் காட்சிகள் வரிசையில் பிரசாதம் வாங்குவது போலவே இருக்கிறது. அதாவது வில்லன்கள் வரிசையாக வந்து ஹீரோவிடம் அடிவாங்கிச் செல்வார்கள். இந்தப் படத்தில் ஹீரோ சூப்பர் ஹீரோ ட்ரெஸ் போட்டிருக்கிறார், அவ்வளவே.
இந்த விமர்சனத்தை மிஷ்கின் தனது சினிமா மொழியால் சமன் செய்வார் என்று நம்பலாம். விஷயம் அதுவல்ல, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரம்.
பெரிய படங்களுக்கு கண்டபடி விளம்பரம் தந்தால் சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பத்திரிகை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. முழுப்பக்க விளம்பரம் தர தடை உள்ளது. அதையும் மீறி முகமூடிப் படத்துக்கு முழுப்பக்க விளம்பரம் தந்திருந்தனர்.
புகைச்சலாக இருந்த இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டுத் தாக்கி பெரும் நெருப்பாக்கியிருக்கிறார் நமது கரு.பழனியப்பன். படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அநியாயம் கண்டு பொங்குகிறவர் போலிருக்கிறது. அமரா படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு வந்தவர் முகமூடி மேட்டரை கிழித்துவிட்டார். முக்கியமாக யு டிவியின் தமிழக பொறுப்பாளர் தனஞ்செயனை வறுத்தெடுத்தார்.
கரு.பழனியப்பன் பேச்சால் முகமூடியின் முழுப்பக்க விளம்பர விவகாரம் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் எதிரொலித்திருக்கிறதாம்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்த அத்துமீறலை முதலில் தொடங்கியவர் கலாநிதி மாறன். எந்திரன் படத்துக்காக தினகரன் பத்திரிகையையே எந்திரன் பத்திரிகையாக மாற்றி பல பக்கத்துக்கு ஃபோட்டோவும், செய்தியுமாக ரொப்பினார். பெரிய இடம்... யாரும் வாய் திறக்கவில்லை. அதை தனஞ்செயன் இப்போது வழி மொழிந்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum