ஏஜிஎஸ் மல்டி பிளிக்ஸின் கொள்ளை
Page 1 of 1
ஏஜிஎஸ் மல்டி பிளிக்ஸின் கொள்ளை
இன்று தடுக்கி விழுந்தால் மல்டி பிளிக்ஸ்தான். நவநாகரிகத்தின் அடையாளமாக நம்ப வைக்கப்பட்டிருக்கும் இந்த திரையரங்குகளில் வழிப்பறியைவிட மோசமான கொள்ளைகள் நடந்து வருகின்றன.
மாற்றான் படத்தை தயாரித்திருக்கும் கல்பாத்தி எஸ்.அகோரம் சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு மல்டி பிளிக்ஸ் வைத்திருக்கிறார். ஐந்து திரைகள் கொண்ட இதில் தற்போது மாற்றான் அனைத்து திரைகளிலும் ஓடுகிறது. இந்தப் படத்தை ஆன் லைனில் புக் செய்வதாக இருந்தால் டிக்கெட் கட்டணம் 120 உடன் எண்பது ரூபாய் அதிகமாக பிடித்துக் கொள்கிறார்கள். அத்துடன் சர்வீஸ் கட்டணம் என்று ஐம்பது ரூபாய்.
சரி, இந்த எண்பது ரூபாய் எதற்கு என்றால் ஒரு டின் கோக்குக்கும், பாப்கார்னுக்கும். இது கண்டிப்பாக நீங்கள் வாங்கியாக வேண்டும். கோக், பாப்கார்ன் சாப்பிடுவதில்லை என்று வாதிட்டாலும் ஒன்றும் நடக்காது கூப்பனை வாங்கித்தான் ஆக வேண்டும். ஆன்லைனில் இது பற்றி விவாதிக்க முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் 120 ரூபாய் டிக்கெட்டுக்கு 250 ரூபாய் அழ வேண்டியிருக்கிறது.
கொடுமை என்னவென்றால் நேரில் சென்று கவுண்டரில் டிக்கெட் வாங்கினாலும் டிக்கெட்டுடன் இந்த எண்பது ரூபாய்க்கான டோக்கன் வாங்கியாக வேண்டும். முடியாது என்றால் உங்களுக்கு டிக்கெட் கிடையாது. கோக், பாப்கார்ன் வேண்டாம் அதற்குப் பதில் எண்பது ரூபாய் மதிப்புள்ள வேறு ஏதேனும் - தண்ணி பாட்டில், கேக் மாதிரி - கேட்டாலும் கிடைக்காது. கேண்டீன் முழுக்க கோக் டின்னும் பாப்கார்னுமாக நிறைத்து வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் 1,200 ரூபாய்க்கு ஒரு குக்கர் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த குக்கர் வேண்டுமென்றால் நீங்கள் 800 ரூபாய்க்கு ஒரு அண்டா வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வளவு பெரிய அநியாயம், மோசடி? அத்தகைய அநியாயத்தை, மோசடியை ஏஜிஎஸ் திரையரங்கில் சாதாரணமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அப்பட்டமான திருட்டு. படம் பார்க்க வரும் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலிருந்து ஏஜிஎஸ் திருடுகிறது. ஒரு பொருளை வாங்க வேண்டுமானால் அப்பொருளின் விலையில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்புடைய ஒரு பொருளை அதுவும் அவர்கள் தரும் பொருளை கண்டிப்பாக வாங்கியாக வேண்டும் என்பது வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பானது.
இதுபோன்ற மோசடிகள் ஏதேனும் ஒருவகையில் அனைத்து மல்டி பிளிக்ஸ்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை தட்டிக் கேட்க அரசாங்கமோ, அரசு அதிகாரிகளோ இல்லையா என்பதுதான் நம் கேள்வி. திரையரங்குகளில் உள்ள கேண்டீன்கள் உணவு தயாரித்து விற்பவையல்ல. அதனால் ஒரு பொருளின் எம்ஆர்பி என்னவோ அதற்குதான் விற்றாக வேண்டும். ஆனால் அரை லிட்டர் தண்ணி பாட்டிலை 20 ரூபாய்க்கு - ஒரு மடங்கு அதிகமாக விலை வைத்து விற்கிறார்கள். இது நுகர்வோரை சுரண்டுவது, சட்டப்படி குற்றம்.
இந்த திருட்டுப் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏஜிஎஸ் தயாரிப்பில் ஜெயம் சகோதரர்கள்
» மல்டி மீடியா கற்றுக்கொள்ளுங்கள்
» மல்டி பொடி சாதம்
» மல்டி காய்கறி குழம்பு
» மல்டி மீடியா அடிப்படைகள்
» மல்டி மீடியா கற்றுக்கொள்ளுங்கள்
» மல்டி பொடி சாதம்
» மல்டி காய்கறி குழம்பு
» மல்டி மீடியா அடிப்படைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum