ஆழ்வாராய் வந்துதித்த அவதார புருஷன்
Page 1 of 1
ஆழ்வாராய் வந்துதித்த அவதார புருஷன்
முதாயத்துக்காகப் பெரிதும் உழைத்த ஒரு நல்லவரை எப்படி கௌரவப்படுத்தலாம்? அவர் வசித்த வீதிக்கு அவருடைய பெயரை வைக்கலாம்; அல்லது அந்தப் பகுதிக்கே வைக்கலாம். ஆனால்
அவருடைய ஊருக்கே அவர் பெயர் வைப்பது என்றால் அவர் எந்த அளவுக்கு மக்களுக்கு உகந்தவராக இருப்பார்!
அப்படிப்பட்டவர்தான் நம்மாழ்வார். திருக்குருகூர் என்ற தலத்தில் அவதரித்த அவர் பெயராலேயே ‘ஆழ்வார் பிறந்த திருநகர்’ என்ற பொருளில், அந்த ஊர், ‘ஆழ்வார்திருநகரி’ என்று அழைக்கப்பட்டது.
இத்தனைக்கும் பிறந்து பதினாறு ஆண்டுகள் வரை இவர் பசிக்காக அழுததில்லை, சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியதில்லை, ஏன், ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. அதைவிட, இத்தனை
வருடங்கள் இவர் தன் வீட்டில் வசிக்காமல், ஒரு புளியமரப் பொந்திற்குள் போய் வாசம் செய்தார். தவழும் வயதில் இவ்வாறு புளிய மரத்தில் புகுந்த இவர், பதினாறு வருடங்களாக அப்படியே கிடந்தது
பேரதிசயம். சில இதழ்களுக்கு முன் நத்தம் திவ்யதேசம் பற்றி விவரித்தபோது இந்தத் தகவலைப் பார்த்தோம்.
இந்தப் புளியமரம், ஸ்ரீராமனால் இங்கு அனுப்பப்பட்ட லட்சுமணனே! ஆரண்யவாச காலத்தில் தன் தமயனாருக்கும் அண்ணியாருக்கும் பாதுகாவலனாக, உறுதுணையாக இருந்த லட்சுமணன், இரவெல்லாம்
உறங்காது, விழி இமைக்காது காவல் காத்தான் என்ற புராணத் தகவலை, இப்போதும்கூட இந்தப் புளியமரத்து இலைகள் இரவிலும் மூடாதிருந்து நிரூபிக்கின்றன. தன் பட்டாபிஷேகத்துக்குப் பிறகு,
குடிமகன் ஒருவனின் அவதூறு காரணமாக சீதையைக் காட்டிற்கு அனுப்பி வைத்தான் ராமன். பிறகு ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தபோது, அவனது மாளிகையைக் காவல் காக்கும் பொறுப்பில்
இருந்தான் லட்சுமணன். சில ராஜீய விஷயங்களில் ஈடுபடும்போது, மூன்றாம் நபர் அந்த அந்தரங்கத்தில் தலையிடுவதை பொதுவாகவே ஒரு அரசர் விரும்பமாட்டார். அந்த வகையில் தானும் யமனும்
தனித்துப் பேச வேண்டிய கட்டாயத்தில், அந்த ரகசியத் தனிமைக்கு யாரும் இடையூறு செய்யாவண்ணம் பார்த்துக்கொள்ளுமாறு ராமன், தம்பி லட்சுமணனுக்கு உத்தரவிட்டிருந்தான். அப்போது துர்வாச
முனிவர் ராமனைப் பார்க்க வந்தார். அண்ணன் ஆணை மனதில் நின்றாலும் முனிவரின் கோபம் உலக பிரசித்தி பெற்றதாயிற்றே, அது தன் அண்ணனையும் பாதித்து விடுமோ என்று பயந்த லட்சுமணன்,
அவர் ராமனின் அறைக்குள் செல்ல எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
முனிவர் தன்னிச்சையாக உள்ளே நுழைந்ததால் எரிச்சல் கொண்ட ராமன், அப்போதைக்கு முனிவரிடம் இன்முகத்துடன் பேசி வழியனுப்பி வைத்துவிட்டாலும், லட்சுமணன் மீது கோபம் கொண்டான்.
அதன் விளைவாக அவன் திருக்குருகூர் தலத்தில் ஒரு புளிய மரமாக நிற்க சாபமும் இட்டுவிட்டான்! கலங்கி நின்ற லட்சுமணனைப் பார்த்ததும், தனக்கு அவன் ஆற்றிய உயரிய சேவைகளும் தற்போது
முனிவர் கோபத்துக்கு பயந்து தன் ஆணையை அவன் ஈடேற்றாத இயலாமையும் ராமன் நெஞ்சை அழுந்த, ‘‘கவலைப்படாதே லட்சுமணா, ஒரு தாய்க்கும் மேலாக என்னைப் பார்த்துக்கொண்ட
உன்னுடைய அந்த புளியமர வடிவில் நானும் குடியிருப்பேன்; அதாவது உன் மடியில் உறக்கம் கொள்வேன்’’ என்று ஆறுதல் அளித்தான்.
‘திறல் விளங்கும் இலக்குமனனைப் பிரிந்தான் தன்னை’ என்று, ராமாயணம் உத்திரகாண்டப் பகுதியில் குலசேகர ஆழ்வார் மனம் உருக வர்ணித்த சம்பவம்தான் இது. அந்த லட்சுமணப் புளியமரத்தில்தான்
சடகோபன் (பிறந்த குழந்தையை உலகத் தொடர்புக்கு உட்படுத்தும் சடம் என்ற வாயுவை கோபித்து வெருட்டியதால் ஏற்பட்ட பெயர்) என்ற நம்மாழ்வார் என்ற ஸ்ரீராமன், பதினாறு ஆண்டுகள் துயில்
கொண்டான்! அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வாரை ஓர் ஒளி வழிநடத்தி, திருக்குருகூருக்கு, இந்தப் புளியமரத்தருகே கொண்டுவந்து சேர்த்தது. அதுவரை உண்ணாமல், உறங்காமல், ஆனால் சீரான
உடல் வளர்ச்சி கொண்டு கிடந்த சடகோபன், தன் முதல் உரையாடலை மதுரகவியாருடன் நிகழ்த்தினார். உடனேயே நான்கு வேதங்களின் பொருட்களும் நான்கு பிரபந்தங்களாக அவரிடமிருந்து பீறிட்டுக்
கிளம்பின. விண்ணவரும் மண்ணவரும் இந்த அதிசயத்தைக் காண ஓடோடி வந்தார்கள். அவர்கள் மட்டுமா, 108 திவ்ய தேசப் பெருமாள்களும் வந்து, புளியமரத்தில் இலைகளில் அமர்ந்துகொண்டு,
தங்களை மங்களாசாசனம் செய்விக்குமாறு அந்த சடகோபனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர்! இந்த வகையில் 36 திவ்ய தேசங்களை, அந்தந்த இடங்களுக்குப் போகாமலேயே மங்களாசாசனம்
செய்தார், நம்மாழ்வாராகிவிட்ட இந்த சடகோபன்!
அந்தப் புளியமரம் இன்றும் அதிசய சாட்சியாகக் காணக் கிடைக்கிறது. சடகோபன் படுத்திருந்த பொந்து மிகுந்த வணக்கத்துக்குரியதாக அமைந்திருக்கிறது. மரத்தில் புளியம்பூ பூக்கிறது; புளியங்காயாக
அது மாறுகிறது. ஆனால், பழுக்காமல் அப்படியே காயாகவே உலர்ந்து விடுகிறது! உறங்கா புலியாக விழிப்புடன் தமையனாரை காத்த லட்சுமணன், இப்போது உறங்காப் புளியாகத் தோற்றமளிக்கிறான்.
ஆன்ம ஞானத்தால் பழுத்த தன் தமையனாரை நம்மாழ்வாராக, தன்னுள் வசிக்க இடம் கொடுத்ததால், வேறு பழத்துக்கு இடம் ஏன் என்று நினைத்தோ என்னவோ, அந்தப் புளியங்காய் பழமாவதில்லை!
இந்தத் தலத்தில் அர்ச்சாவதாரமாக தரிசனம் தரும் நம்மாழ்வார், சிற்பிகளால் உருவாக்கப்படாதவர். அத்யந்த சீடனான மதுரகவியாவார், அருகில் ஓடும் தாமிரவருணி ஆற்றிலிருந்து நீரெடுத்து அதனை
குரு பக்தியோடு காய்ச்சி, அவருடைய உருவத்தை மனதார நினைத்து, காய்ச்சிய நீரை வடித்தபோது, அந்த நீர் அப்படியே நம்மாழ்வார் சிலையாக நிலை கொண்டது! இத்தலத்தில் நம்மாழ்வாருக்குத் தனி
ஆலயமே அமைந்திருக்கிறது. ராஜமுடியுடன் அமர்ந்து உபதேசம் செய்யும் அற்புதக் கோலம். இவருக்கு முன்னால் தனியாக கொடிமரமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
கோயிலுக்குள் நுழையும்போதே அங்கே பொதுவுடைமை கொள்கை கடைபிடிக்கப்படுவதைக் காணலாம்; ஆமாம், உள்ளே ஒரு ரேஷன் கடை. பொதுமக்கள் தமக்குரிய உணவுப் பொருள் பங்கை உரிய
தொகை கொடுத்து பெற்றுச் செல்கிறார்கள். வரிசையில் நிற்கும் அந்த பக்தர்கள் சற்று உட்புறமாக நோக்கி, கோயிலை தரிசனம் செய்கிறார்கள். அது, தமக்குக் கிடைக்கும் பொருட்களுக்கு இறைவனுக்கு
நன்றி சொல்லும் பாங்காகவே இருக்கிறது! அடுத்து மிகவும் பொருத்தமாக அன்னதான மண்டபம்! இரண்டாவது கோபுரத்துக்குக் கீழே 32 பெயர்கள் பட்டியலிடப்பட்ட கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது.
அவை எல்லாமே நம்மாழ்வாருடைய வேறு வேறு பெயர்கள்! அங்கே கம்பீரமாக நிற்கும் கோயில் யானையும் அடிக்கடி தும்பிக்கையை உயர்த்தி அந்தப் பெயர்களுக்கு மரியாதை செய்கிறது. இன்னும்
உள்ளே சிறிய திருவடியான ஆஞ்சநேயர் வரவேற்கிறார். திருமால் திருவடியையும், துவஜஸ்தம்பத்தையும் வணங்கி முன்னே சென்றால், கண்ணாடி மண்டபம் ஒளிர்கிறது. கருவறை மண்டபத்தில் ராமர்,
சீதை-லட்சுமணன்-அனுமனுடன் தனி சந்நதியில் கோயில் கொண்டிருக்கிறார். அவருடைய மயக்கும் புன்னகை, ‘என்னை நம்மாழ்வாராகவும் தரிசனம் செய்யுங்கள்’ என்று சொல்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்
» வாமன அவதார வழிபாடு:
» ராம அவதாரத்திற்கான காரணம்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்
» வாமன அவதார வழிபாடு:
» ராம அவதாரத்திற்கான காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum